Skip to main content

மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கும் பெண்கள்!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

trichy bus womens travelling

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தி.மு.க. தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து தமிழக முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

 

அவருடைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள சரத்தின் படி பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயண திட்டத்தை முதலமைச்சர் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார்.

 

அதன்படி, தமிழகம் முழுவதும் பெண்கள் மாநகரப் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக, திருச்சி மண்டலத்தில் அரசு பஸ்களில் மூன்று நாளில் மட்டும் 5.64 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

 

திருச்சி மண்டலத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 335 அரசு மாநகரப் பேருந்துகளில் 5.64 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 பெண்களை ஏற்றிச் செல்லாத பேருந்து; ஓட்டுநர் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Action on the driver for A bus that does not carry women

விக்கிரவாண்டி பகுதியில் இருந்து விழுப்புரத்துக்கு அரசு பேருந்து ஒன்று கடந்த 22ஆம் தேதி, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது, அந்தப் பேருந்து பை பாஸ் வழியாக செல்லும் போது அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாமல் புறப்பட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, போக்குவரத்துத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. 

அந்தப் புகாரின் பேரில், பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாத அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘22.04.2024 அன்று விழுப்புரம் கோட்டம் விழுப்புரம் கிளை 2-ஐ சார்ந்த டிஎன்32/ என்.2218 தடம் எண்.TIF விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் வரும்பொழுது சுமார் 8.00 மணியளவில் விழுப்புரம் பைபாஸ் அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக ஊடகத்தின் வாயிலாக புகார் செய்தி வெளிவந்தது. 

அதன் அடிப்படையில், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள விழுப்புரம் மண்டல பொது மேலாளர் உத்தரவின்படி அப்பேருந்தில் பணியாற்றிய ஓட்டுநர் ஆறுமுகம், தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நடத்துநர் தேவராசு பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.