Skip to main content

திருச்சி மங்காயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

trichy alaththudaiyaanpatti sri mangayi amman temple festival 

 

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மங்காயி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 

இதில் விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், புண்ணிய வாசகம், பஞ்ச கல்ப பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம், விஜய ஹோமம், மகா பூர்ண ஹாதி ஹோமம் நடைபெற்றது. மேலும் குரு ஹோரையில் எந்திரம் நவரத்தினம் பஞ்சலோகம் வைத்து அனைத்து தெய்வங்களுக்கும் அஷ்ட பந்தனம் மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர் தீபாராதனையுடன் யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்களால் கலசம் எடுத்து வரப்பட்டு அனைத்து கோபுர கலசங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து மூல தெய்வங்களுக்கும் மகா குடமுழுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை ஆகியவை செய்து அருள் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

 

குடமுழுக்கு விழாவைக் காண சென்னை, சேலம் போன்ற வெளியூர்களில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கௌரவத் தலைவர் பழனி ஆண்ட பிள்ளை, துணைத் தலைவர் கணேசன், பொருளாளர் சிதம்பரம் ஜோதி, தலைவர் மருதமுத்து பிள்ளை, செயலாளர் ரவிக்குமார், இணை செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னின்று நடத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Extension of darshan time at Sabarimala

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் கோயில் நடை திறக்கப்பட்டு நெய் தீபம் ஏற்றப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டு முக்கிய நிகழ்வாக கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுமார் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் நாளை (11.12.2023) முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாலை 4 மணிக்கு பதில் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

வழக்கமாக சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சபரிமலை நடை திறப்பு காரணமாகத் தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்; பரிதாபமாக பலியான இருவர்! 

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
A car overturned in a 50-foot ditch! Two  passes away

திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் போட்டையில் இருந்து சமயபுரம் நோக்கிச் செல்லும், திருச்சி - சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில்,  கொள்ளிடம் ஆற்றின் பாலத்தை வேகமாக கடக்க முயன்ற கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் தடுப்புக்கட்டையை உடைத்துக்கொண்டு 50 அடி கீழே ஆற்றுக்குள்ளே பாய்ந்து, தலைகீழாக கவிழ்ந்து, சுக்குநூறாக சேதமடைந்தது.

கேரளா மாநில பதிவு எண் கொண்ட அந்த சைலோ காரில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த காரில் பயணம் செய்த ஆண்,பெண் இருவரும் கணவன் மனைவியாக இருக்கக்கூடும் என போலீசார் அனுமானித்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருச்சி ஸ்ரீரங்கம் காவல்நிலைய போலீசாரும், ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்புத் துறையினரும், ரோப் கிரெயின் வாகனத்தின் உதவியுடன் காரையும், இறந்தவர்களின் உடல்களையும் ஆற்றுக்குள் இருந்து மீட்டெடுத்தனர்.

இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணிநேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கிய காரில் இருந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில், திருச்சி விமான நிலைத்திற்கு வந்திறங்கிய, கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருக்கு சொந்தமான உடைமைகள் என்பது தெரியவந்தது. அதில் விமான நிலைய சீல்களும் இருந்தன. 

அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் பலியானவர் ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவியாக இருக்கக்கூடும் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது. மேலும் சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் வந்து விபத்து குறித்து  ஆய்வு மேற்கொண்டார்.