பத்துக்கும் மேற்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக மருத்துவத்துறை செயலாளராக இருந்தககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக இருந்த மணிவாசகம் நீர்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் தற்போது சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத் துறை செயலாளராக இருந்த சந்திப் சக்சேனா செய்தி மற்றும் அச்சு காகிதத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக மங்கத் ராம் ஷர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படியாகபத்துக்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.