Skip to main content

பொற்பனைக்கோட்டை யில் மாணவர்களுக்கு 'மரபு மேலாண்மை மற்றும் தொல்பொருட்களைப் பாதுகாத்தல்' பயிற்சி

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

Training on 'Heritage Management and Conservation of Antiquities' for students at Polpanaikottai

 

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தின் ஈராண்டு தொல்லியல் முதுநிலைப் பட்டயம் மற்றும் ஈராண்டு கல்வெட்டியல் முதுநிலை பட்டயம் ஆகிய பட்டயப் படிப்புகளில் பயின்று வரும் 29 மாணவ, மாணவிகளுக்கு "மரபு மேலாண்மை மற்றும் தொல்பொருட்களைப் பாதுகாத்தல்" என்ற பாடப்பிரிவின் ஒரு பகுதியாக வேதியியல் முறையில் தொல்பொருட்களைப் பாதுகாத்தல் குறித்து தஞ்சாவூர் மணிமண்டபத்திலுள்ள இராஜராஜன் அகழ்வைப்பகத்தில் 01.06.2023, 02.06.2023 மற்றும் 03.06.2023 ஆகிய 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

 

அதன் தொடர்ச்சியாக இன்று ஞாயிற்றுக் கிழமை  (04.06.2023)  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களுக்கும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத் தளத்திற்கும் மாணவர்களை அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்பட்டது. இன்னும் சிதிலமடையாத சங்ககால கோட்டைச் சுவர்கள், கொத்தளம் ஆகியவற்றை காண்பித்து அகழாய்வு நடக்கும் சங்ககால கோட்டையின் பகுதி மற்றும் முழு பகுதி அடங்கிய படங்கள் காண்பிக்கப்பட்டு விளக்கம் கூறப்பட்டது. தொடர்ந்து அகழாய்வு குழிகளில் தென்பட்டுள்ள செங்கல் கட்டுமானம் பற்றியும் அகழாய்வு செய்யும் முறைகள், பாதுகாப்பு முறைகள் பற்றியும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் கூறப்பட்டது.

 

Training on 'Heritage Management and Conservation of Antiquities' for students at Polpanaikottai

 

பயிற்சியின் போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் துணை இயக்குநர் முனைவர் இரா.சிவானந்தம், தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவன ஒருங்கிணைப்பாளர் கி.பாக்கியலட்சுமி, பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குநர் த.தங்கதுரை, அ.சாய்பிரியா, சு.மூ.உமையாள், இரசாயனர் ச.செந்தில்குமார், மற்றும் தொல்லியல் அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்.

 

பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் கூறும் போது, 'பாடப்புத்தகங்களில் படிப்பதைவிட இது போன்ற இடங்களில் நேரடியாக பயிற்சி பெறுவது சிறப்பாக உள்ளது. சங்ககால கோட்டை, கொத்தலம், அகழி ஆகியவற்றை முழுமையான காணமுடிந்தது' என்றனர்.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

21 தமிழக மீனவர்கள் கைது; தொடரும் அட்டூழியம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

21 Tamil Nadu fishermen arrested; Continued atrocities

 

மிக்ஜாம் புயல் காரணமாக பல நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், நேற்று கடலுக்கு சென்ற மீனவர்கள் 21 பேர் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த மாதம் 27 ஆம் தேதியிலிருந்து புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, நேற்று மீன் பிடிக்கச் சென்றனர்.

 

நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை மன்னார் - கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 17 பேரைக் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இன்று தற்போது ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மொத்தம் 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த 21 மீனவர்களில் 13 பேர் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள், 8 பேர் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

'மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்' - புதுக்கோட்டை மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

'Do not go to the sea until further notice'-Pudhukottai fishermen warned

 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அதேபோல் டிசம்பர்.1, 2, 3 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், வேலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை ஆகிய 28 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், புதுக்கோட்டை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  மோசமான வானிலையால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மீனவர்கள் தங்கள் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்