/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mrts-file-train.jpg)
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிவிப்பில், “சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரயில் வழித்தடத்தில் நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இரவு நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் இன்று (03.10.2023) முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே போன்று தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயில் இன்று முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
மேலும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே போன்று தாம்பரத்தில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயில் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை என மொத்தம் 4 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)