Skip to main content

ரயில் ஒட்டுநர்கள் உண்ணாவிரதம்!!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

Train drivers involved on hunger strike

 

அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் இந்தியா முழுக்க அவர்களது 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு ரயில் நிலையத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குச் சேலம் கோட்ட தலைவர் சந்திர மனோகர் தலைமை தாங்கினார். தென் மண்டல துணைச் செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

 

அவர்களின் கோரிக்கைகளான, ‘மத்திய பா.ஜ.க. அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நாசகர முடிவை கைவிட வேண்டும். ரயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்குவதை உடனே கைவிட வேண்டும். ஒட்டுநர்கள் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து நாளென்றுக்கு 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். ஊழியர்களின் இரவு பணியின் படியை உச்ச வரம்பின்றி வழங்க வேண்டும்.

 

பெண் ரயில் ஓட்டுநர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இந்தியா முழுக்க ரயில்வே துறையில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பணியாளர்களின் பணியிட மாறுதல் ஐந்து வருடம் என்ற தடையை நீக்க வேண்டும்’என்பன உள்ளிட்ட  17 அம்ச கோரிக்கையை  வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான ரயில் ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்