Skip to main content

கடலுக்குள் மீன்பிடிக்க சென்றபோது விபரீதம்; 3 மீனவர்களின் நிலை என்ன?

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Tragedy when he went fishing in the sea in bamban

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, பாம்பன் மீனவர்கள் இன்று (15-06-24) காலை விசைப்படகு மூலம் வடக்கு கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது, நடுக்கடலில் சென்ற படகு எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது. இதில் 5 மீனவர்களும் கடலில் மூழ்கினர். ஆனால், 5 பேரில் இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக கரைக்கு திரும்பிய நிலையில், 3 மீனவர்கள் மட்டும் மாயமாகியுள்ளனர். 

கரைக்குச் சென்ற 2 மீனவர்கள், இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்ததன் பொருட்டு, மற்ற சக மீனவர்கள் கடலுக்குச் சென்று காணாமல் போன 3 மீனவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
4 Tamil Nadu fishermen arrested!

மீன்பிடி தடைக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் ஆர்வமுடன் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது ஸ்ரீலங்கா நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இன்று அதிகாலை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ஒரு படகையும் அதில் இருந்த 4 மீனவர்களையும் கைது செய்து சிறைபிடித்துச் சென்றுள்ளனர். சிறைபிடித்துச் சென்ற இலங்கை கடற்படையினர், 4 மீனவர்களை இலங்கையில் உள்ள கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த 4 மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து பிற்பகலுக்கு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியிலும், தமிழ்நாடு மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை; கடல்சார் தகவல் மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
Marine Information Center Alert To the attention of coastal people

தமிழ்நாட்டில் தற்போது வெப்ப அலை அதிகரித்து வருகிறது. ஈரோடு போன்ற சில மாவட்டங்களில், 100 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வெப்ப அலையில் தப்பிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மேலும், பொது மக்களை அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும், வெளியே வரும் பொதுமக்கள் அதிகளவு நீர் மோர், பழங்கள் உள்ளிட்ட உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் சில பகுதிகளில் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. 

இந்த நிலையில்,‘கல்லக் கடல்' எனும் நிகழ்வு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில நேரங்களில் திடீரென எந்தக் குறிப்பும் அல்லது எச்சரிக்கையும் இன்றி ஏற்படும் பலத்த காற்றின் விளைவுதான் "கல்லக்கடல்" என அழைக்கப்படுகிறது.

இந்நிகழ்வு இன்றும், நாளையும் ஏற்பட வாய்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக  கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலை சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் (செங்கல்பட்டு) மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படியும், கடலோர பகுதியில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.