Skip to main content

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் மிதந்த சோகம்; போலீசார் விசாரணை

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
 Tragedy of Depressed Woman Floating in Well; Police investigation

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை 1010 காலனியைச் சேர்ந்தவர் கல்பனா (39). இவரது கணவர் பழனிசாமி (44). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 5 மாதங்களாக கல்பனாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலையில் கல்பனா, அருகில் உள்ள அவரது தந்தையின் தோட்டத்திற்குச் சென்று கருவேப்பிலை பறித்துக் கொண்டு வருவதாக தனது மூத்த மகனிடம் கூறிச் சென்றுள்ளார். அவர் சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், தோட்டத்துக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்குள்ள கிணற்றில் கல்பனாவின் செருப்பு மிதந்துள்ளது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ  இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் கல்பனாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரவு 9 மணியளவில் கல்பனா சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து, சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டனர். அதில், கிணற்று மேட்டில் இருந்த கருவேப்பிலை மரத்தில் கருவேப்பிலை பறித்த போது, கால் இடறி கல்பனா கிணற்றில் விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது சடலம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்