Published on 01/09/2023 | Edited on 01/09/2023

ஏடிஎம்களுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த காவலாளி துப்பாக்கியைத் துடைக்கும் போது தோட்டா பாய்ந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் செயல்பட்டு வரும் வங்கி ஏடிஎம்களுக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த காவலாளி, பாதுகாப்பிற்காக டபுள் பேரரல் (இரட்டைக் குழல்) துப்பாக்கி வைத்திருந்தார். இந்நிலையில் அந்த துப்பாக்கியை அவர் இன்று துடைக்க முயன்றபோது தவறுதலாக விசை இயக்கப்பட்டதால் அதிலிருந்து வெளியேறிய குண்டு காவலாளியின் வயிற்றில் பாய்ந்தது. வயிற்றின் இடதுபுறத்தில் குண்டு பாய்ந்த நிலையில், மீட்கப்பட்ட அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.