Skip to main content

பாலம் சீரமைப்பு - சென்னைக்குள் நுழைய முடியாமல் பொதுமக்கள் சிரமம்!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

்ு


செங்கல்பட்டு அருகே பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம் இருக்குன்றம்பள்ளி மாமண்டூர் இடையே உள்ள பழமைவாய்ந்த பாலத்தில் சில இடங்களில் விரிசல் விழுந்துள்ளது. இதனையடுத்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால், திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றுப்பாதை உருவாக்கப்பட்டு அதில் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் குறிப்பிட்ட அந்த பகுதியில் வாகனங்கள் மிகவும் சீராக சாலையை கடந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை சீராக அனுப்பிவைத்து வருகிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் சரியாகும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Attention Paytm Passtag users

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளைத் தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இதனையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை மறுநாளுக்குள் (15.03.2024) வேறு  வங்கிக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“நான்தான் பாலத்தை கட்டவேண்டும் என்பது பகவான் கிருஷ்ணரின் முடிவு” - பிரதமர் மோடி பெருமிதம்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 PM Modi proudly says It was Lord Krishna's decision that I should build the bridge

குஜராத் மாநிலத்தில், 4 வழி கொண்ட கேபிள் பாலம் ஒன்றை பிரதமர் மோடி நேற்று (25-02-24) திறந்து வைத்தார். நாட்டின் மிக நீண்ட பாலமான இந்த பாலத்திற்கு சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து, துவாரகா தீவுக்கு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் மூழ்கி பிரதமர் மோடி பார்வையிட்டு பிரார்த்தனை செய்தார். மேலும் அவர், நீருக்கடியில், கிருஷ்ணருக்கு அடையாளமாக மயில் இறகுகளை கொண்டுசென்று காணிக்கையாக செலுத்தினார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அதன் பிறகு, துவாரகாவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “குஜராத்தில் நான் முதல்வராக இருந்த போது, நான் சுதர்சன் சேது திட்டத்தை, அப்போது இருந்த காங்கிரஸ் அரசிடம் முன்வைத்தேன். ஆனால், அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. சுதர்சன் பாலத்தை நான் கட்ட வேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணர் சாத்தியப்படுத்தியுள்ளார். இன்று துவாராகவிற்கு நான் ஒரு மயில் தோகையை எடுத்துச் சென்று சமர்ப்பித்துள்ளேன். இன்று என் கனவு நனவாகியதால் என் இதயம் உணர்ச்சிகளால் நிரம்பி வழிகிறது.

புதிய இந்தியாவுக்கான உத்தரவாதத்தை நான் மக்களுக்கு வழங்கியபோது, எதிர்கட்சிகள் என்னை கேலி செய்தனர். ஆனால் இன்று ஒவ்வொரு இந்தியனும் தங்கள் கண் முன்னே ஒரு புதிய இந்தியா கட்டப்படுவதை பார்க்க முடிகிறது. காங்கிரஸ், நீண்ட காலம் ஆட்சியில் இருந்த போதிலும் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்களின் முயற்சி அனைத்தும் ஒரு குடும்பத்தை மட்டும் முன்னேற்றுவதற்காகவே. இருந்தது. ஊழல்களை மறைத்து ஐந்தாண்டுகள் எப்படி அரசாங்கத்தை நடத்துவது என்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள். 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்தது. 

2014-ல் நீங்கள் அனைவரும் என்னை ஆசிர்வதித்து டெல்லிக்கு அனுப்பிய போது கொள்ளையடிக்கப்படாமல் நாட்டைக் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்து காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இப்போது இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதன் விளைவுதான் இப்போது இந்தியாவில் நீங்கள் பார்க்கக்கூடிய கட்டுமான அற்புதங்கள்” என்று கூறினார்.