Traffic change in Chennai Police important instructions

சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று (05.08.2024), ஆகஸ்ட் 09 மற்றும் 13 ஆகிய 3 நாட்கள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இதனால் காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை சாலைகளில் தற்பொழுது நடைமுறைகளில் உள்ள போக்குவரத்து மாற்றி அமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பாகச் சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை போர் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை அமையப்பெற்றுள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர மற்ற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையைச் சென்றடையலாம்.

Traffic change in Chennai Police important instructions

Advertisment

பாரிமுனையிலிருந்து இராஜாஜி சாலை, தலைமைச் செயலகம் வழியாகக் காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பாரிஸ் கார்னர், வடக்கு கோட்டை பக்க சாலை, (NFS Road) ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம். அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம். முத்துசாமி பாலத்திலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையைச் சென்றடையலாம்.

சிவப்பு மற்றும் பர்பிள் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 08.30 மணிவரை இராஜாஜி சாலை வழியாகச் சென்று தலைமைச்செயலக உள்வாயிலின் அருகே இறங்கிக்கொண்டு, வாகனத்தைக் கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும். சிவப்பு மற்றும் பர்பிள் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 08.30 மணிக்கு பின்னர் காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலையிலிருந்து வாலஜா சாலை, அண்ணா சாலை, வாலாஜா முனை, முத்துசாமி பாலம், முத்துசாமி ரோடு, வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகச் சென்று தலைமைச் செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களைத் தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள பி.டள்யூ.டி (PWD) வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

Traffic change in Chennai Police important instructions

Advertisment

நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 08.30 மணிவரை இராஜாஜி சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி ரோடு, வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகச் சென்று தலைமைச் செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களைத் தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள பி.டள்யூ.டி வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 08.30 மணிக்கு பின்னர் காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகத் தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள பி.டப்ள்யூ.டி வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர் போர் நினைவுச் சின்னம் அருகில் இறங்கிக்கொண்டு, வாகனங்களைத் தீவுத்திடலில் உள்ளே நிறுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.