Towards huts - Chidambaram Natarajar Temple Priests

உலக நாடுகளை, கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கரோனா தோற்று நோய் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உலக நாடுகளிலுள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தினந்தோறும் கூலி வேலை செய்யும் பொதுமக்கள் கூலித் தொழிலாளர்கள் சிறு தொழில் செய்பவர்கள் என அனைத்து தரப்பினரும் உணவுக்கு அவதியடைந்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் உலக புகழ்பெற்ற தமிழகத்தின் முக்கிய கோயில்களில் ஒன்றாக விளங்கும் நடராஜர் கோவில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது. இந்த கோவிலில் ஊரடங்கு துவக்கத்தில் இருந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் கோவிலின் உள்ளே தினந்தோறும் அபிஷேகம் உள்ளிட்ட தீபாரதனைகள் நடந்து வருகிறது.

Advertisment

அப்போது நடராஜருக்கு படைக்கப்படும் பிரசாதங்கள் சிதம்பரம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சி. கொத்தங்குடி, வக்கராமாரி, கவரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று ஒரு நாளைக்கு 300 குடும்பங்கள் சாப்பிடும் அளவிற்கு பிரசாதங்களை கடந்த மார்ச் மாத ஊரடங்கு நேரத்திலிருந்து இன்றுவரை வழங்கி வருகிறார்கள்.

இதனால் ஏழை எளிய மக்கள் அவர்கள் கொடுக்கும் பிரசாதத்தை அவர்களின் வீட்டில் உள்ள பாத்திரத்தை எடுத்து வந்து மதியம் மற்றும் இரவுக்கும் சேர்த்து வாங்கிக் கொள்கிறார்கள். இதனால் ஏழை மக்களுக்கு இருவேளை உணவு எந்த கஷ்டமும் இல்லாமல் கிடைக்கிறது. இதற்கு நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு குடிசைபகுதி மக்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதனை அறிந்த மற்ற கிராம பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் எங்கள் பகுதிக்கும் வந்து நடராஜர் கோவில் பிரசாதங்களை வழங்குங்கள் என்று தினந்தோறும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Advertisment

இந்தநிலையில் தீட்சிதர்கள் முன் அனுமதி பெற்ற வகையில், அந்தப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை ஆய்வு செய்து அவர்களுக்கு சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் பாஸ்கர தீட்சிதர் மற்றும் கோவில் தீட்சிதர்கள் பிரசாதங்களை வழங்கி வருகிறார்கள். இது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து கரோனா தொற்றுக்கு கடுமையாக பணியாற்றும் காவல்துறையினர், நகராட்சி உள்ளிட்ட அனைத்து தரப்பினரக்கும் சுடசுட உணவுகளை வழங்கி வருகிறார்கள்.