Skip to main content

தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
கர

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் அழைத்து சென்று அடித்ததில் அவர்கள் இருவரும் ஒருவர்பின், ஒருவராக உயிரிழந்துள்ளனர். 

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். சிலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு செய்யப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்! 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Full blockade in Puducherry!

 

இந்து மதத்தைப் பற்றியும், இந்து பெண்கள் பற்றியும் தவறாகப் பேசியதாக தி.மு.க. எம்.பி ஆ.ராசாவைக்   கண்டித்தும், அவர் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுச்சேரியில் இன்று (27/09/2022) ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

 

முழு அடைப்பு போராட்டம் காரணமாக, புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல், இருக்க மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Full blockade in Puducherry!

இந்நிலையில், புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் பகுதியில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் சென்ற தமிழ்நாடு அரசு பேருந்து மற்றும் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வந்த அரசு பேருந்து என இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேருந்தின் மீது கல்வீசி தாக்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுச் சொத்தை சேதப்படுத்துவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.

 

இதனிடையே பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு காலாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், புதுச்சேரி உப்பளத்திலுள்ள இமாகுலேட் தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளி வழக்கம் போல் இயங்கியது. இது குறித்து அறிந்த பா.ஜ.க கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிசெல்வம் மற்றும் இந்து முன்னணியினர் பள்ளி நிர்வாகத்திடம் சென்று பள்ளியை மூடக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

அதனை தொடர்ந்து, அங்கு வந்த பெற்றோர்கள் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை வெளியேறுமாறு கூறி முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து முழக்கமிட்டவாறே பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

 

திடீரென பெற்றோர்களுக்கும், இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Next Story

ஆளும் கூட்டணி முழு அடைப்பு போராட்டம் - மஹாராஷ்ட்ராவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

maharashtra

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.

 

இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 14 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஆஷிஸ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த சனிக்கிழமை (09.10.2021) வன்முறை தொடர்பாக நடைபெற்ற விசாரணைக்கு ஆஜரான ஆஷிஷ் மிஸ்ராவை 12 மணிநேர விசாரணைக்குப் பிறகு உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

இதனையடுத்து நீதிமன்றம் அஷிஸ் மிஸ்ராவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்தநிலையில், லக்கிம்பூரில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இன்று (11.10.2021) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. மஹராஷ்ட்ராவில் ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்த முழு அடைப்பு போராட்டத்தால் மும்பை உட்பட மஹாராஷ்ட்ரா முழுவதும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் பேருந்துகள் ஓடவில்லை. பல இடங்களில் சந்தைகள் செயல்படவில்லை. இது மட்டுமின்றி தானேவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து பேரணி நடத்தினர்.

 

மேலும் சிவசேனா தொண்டர்கள், புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கோலாப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல் காங்கிரஸ் கட்சி, மஹாராஷ்ட்ரா ஆளுநர் மாளிகை முன்பு 'மௌன விரத' போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மும்பையில் நேற்று இரவிலிருந்து தற்போதுவரை ஒன்பது பேருந்துகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.