
தமிழ்நாட்டில் இன்று (05.12.2021) ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 731 லிருந்து குறைந்து 724 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட குறைவு. இன்று ஒரேநாளில் தமிழ்நாட்டில் 1,02,068 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 131 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 136 என்றிருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,529 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8,041 ஆக உள்ளது. இன்று ஒரேநாளில் 743 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26,85,946 பேர் குணமடைந்துள்ளனர். கோவை - 124, ஈரோடு - 59, செங்கல்பட்டு - 61, திருவள்ளூர் - 28, நாமக்கல் - 44, சேலம் - 37, திருச்சி - 20 , திருப்பூர் -65 பேர் என கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.