/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adsds_26.jpg)
தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 2,532 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் சென்னையில் 1,493 பேருக்குகரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,377 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் 25,863 பேர் மருத்துவமனையில் தற்போது கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு 53 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 37 பேரும், தனியார் மருத்துவமனையில்16 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை757 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 22-ஆவது நாளாக கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை என்பது இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது. 50க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை தமிழகம் சந்தித்த சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
சென்னையில் இன்று 1,493 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 16வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குகரோனா பாதிப்பு தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.அதேபோல் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 32,754 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 601 ஆக அதிகரித்துள்ளது.சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 41 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)