tn Govt Transport Corporation  announcementTwo Wheeler LEd TV, fridge Gifts 

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் எனத் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழுவின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறைப்படி நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்குத் தகுதி பெறும். ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அதன்படி முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற பத்து வெற்றியாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.

Advertisment

இந்நிலையில் சிறப்பு குலுக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஓ.டி.ஆர்.எஸ் (OTRS) இன் கீழ் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மூன்று அற்புதமான உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். இது 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளும் இச்சிறப்பு குலுக்கல் முறைக்குத் தகுதி பெறும். இந்த சிறப்பு குலுக்கல் பரிசுகள், 2025ஆம் ஆண்டு பொங்கலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும்.

Advertisment

அந்த வகையில் முதல் பரிசு இரண்டு சக்கர வாகனம் ஆகும், இரண்டாவது பரிசு எல்.இ.டி (LED) ஸ்மார்ட் தொலைக்காட்சிப் பெட்டி மூன்றாவது பரிசு குளிர்சாதனப் பெட்டி ஆகும். எனவே பொதுமக்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களைத் தவிர்த்து எளிதாகப் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.