தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், "சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் 10 ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 50 லட்சம் பேருக்கு கூடுதலாக வேலைவாய்ப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவச் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நீட் தேர்வினைப் புறந்தள்ளுவதற்கு புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம். மருத்துவக் கல்வி சேர்க்கையில் பாகுபாடு காட்டுவதால் மாணவர்களின் சமூகநீதியை அரசு உறுதி செய்யும்.
கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. மூன்றாவது அலையில் நோய்த்தொற்று ஏற்படும் குழந்தைகளின் சிகிச்சைக்காக செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் ஏற்பட்ட மூன்றாவது அலை தாக்கம் பற்றி விரிவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.