Published on 28/12/2018 | Edited on 28/12/2018

அரசு ஆரம்ப பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கையை அனுப்பும் என்றும், அரசு ஆரம்ப பள்ளிகள் எதுவும் இனி தனித்து இயங்காது எனவும், மேலும் வரும் கல்வி ஆண்டில் அனைத்து ஆரம்ப பள்ளிகளும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.