Skip to main content

மகாகவி பாரதியார் உருவப்படத்திற்கு அரசு சார்பில் மரியாதை (படங்கள்)

Published on 11/09/2022 | Edited on 11/09/2022

 

 

 

மகாகவி பாரதியாரின் 101ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்ட உருவப் படத்திற்கு அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால் ‘பாரதியார் மண்டபம்’ எனப் பெயர் மாற்றம்!

Published on 06/08/2023 | Edited on 06/08/2023

 

Durbar Hall in the Governor House has been renamed as Bharatiyar Mandapam

 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழகம் வருகை தந்துள்ளார். நேற்று நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன், பெள்ளியைச் சந்தித்தார். அதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வருகை தந்துள்ளார்.

 

சென்னை வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேற்று (5.8.2023) மாலை சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொன்னாடையும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி வரவேற்றார். இதையடுத்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ‘திராவிட மாடல்’ என்ற புத்தகத்தை வழங்கி குடியரசுத் தலைவரை வரவேற்றார். இந்நிகழ்வில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவைத் துணைத் தலைவர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் எனப் பலர் உடனிருந்தனர்.

 

இதையடுத்து இன்று காலை சென்னையில் நடைபெற்ற, சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும் இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

Durbar Hall in the Governor House has been renamed as Bharatiyar Mandapam

இந்நிலையில், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பாரதியார் மணி மண்டபம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பெயர்ப் பலகை மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் உருவப் படத்தைக் குடியரசுத் தலைவர் முர்மு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பாரதியார் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னை மேயர் பிரியா ராஜன், இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை பெருநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

Next Story

பாரதியாரின் பேத்தி காலமானார்

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

bharathiyar granddaughter passed away

 

பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி நேற்று சென்னையில் காலமானார்.

 

சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், பத்திரிகையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் மகாகவி பாரதியார். இவரின் மூத்த மகளான தங்கம்மாள் மகள் லலிதா பாரதி ஆவார். இவருக்கு வயது 94.  மிகச் சிறந்த கவிஞரான இவர் 40 ஆண்டுகள் இசை ஆசிரியராகப் பணியாற்றியவர். மேலும் தனது தாத்தாவான பாரதியாரின் பாடல்களை இசை வடிவில் பரப்பும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

 

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக லலிதா பாரதி நேற்று காலமானார். இவரது மரணம் தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.