Skip to main content

கார் எரிப்பு விவகாரம்... இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்...!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

திருப்பூர் கோட்ட செயலாளர் மோகனசுந்தரத்தின் காரை தீ வைத்து கொளுத்தியதற்கு  இந்து முன்னணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை காந்திபார்க் பகுதியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 'தீ வைத்து கொளுத்திய அந்த சமூக விரோதிகளை கைது செய்' என முழக்கங்கள் எழுப்பினர். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா, கோட்ட செயலாளர் சதீஷ், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

tirupur hindu munnani worker issue

 

 

மேலும் வருகின்ற காதலர் தினத்தன்று காதல் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடுகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீர்கேடுகள் நடைபெறாமல் இருக்க காவல்துறை தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். காதலர் தினத்தை முன்னிட்டு 13-ம் தேதி இந்து முன்னணி கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘அக்பரும் சீதாவும் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது’ - விஷ்வ இந்து பரிஷத்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 Vishwa Hindu Parishad petitioned Akbar and Sita lionsshould not be in the same place

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்த பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது.

இதனிடையே, இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மேற்கு வங்க உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். அதனால், அந்த சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் வருகிற 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 

Next Story

எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Writer Devibharathi greeted the minister in person

ஒவ்வொரு வருடமும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த வருட விருது தமிழ் எழுத்தாளரான தேவிபாரதிக்கு அவர் எழுதிய ‘நீர்வழிபடூஉம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் அவருக்கு மத்திய அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பு சேர்க்கப்படுகிறது.

எழுத்தாளர் தேவிபாரதி சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள நொய்யல் நதிக்கரையில் இருக்கும் புது வெங்கரையாம்பாளையம் என்ற குக்கிராமத்தில்தான் அவர் வசித்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் தொலைப்பேசி மூலமும் பல எழுத்தாளர்கள், அவரின் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று தேவிபாரதியை வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை அவர் வசித்து வரும் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் தேவிபாரதியை தமிழக அரசின் சார்பாகவும் முதல்வர் சார்பாகவும் வாழ்த்தி கௌரவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார். சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதியை அமைச்சர் நேரில் சென்று வாழ்த்தியது அந்த கிராம மக்களையும், எழுத்தாளர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.