Skip to main content

நடிகர், நடிகைகள் புகைப்படங்களுடன் முக கவசம்... விற்பனை படு ஜோர்...

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
 maskதிருப்பூரில் புகைப்படங்களுடன் தயாரிக்கப்படும் முக கவசங்களுக்கு அநியாய வரவேற்பு பெற்றுள்ளது. 


கரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்ள முக கவசங்கள் அணிய வேண்டும் என உலகமே எச்சரித்து மக்களுக்கு கவசத்தின் அவசியத்தை உணர்த்தி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முக கவசங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் 24 மணி நேரமும் அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மெடிக்கல் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த முக கவசங்கள் தற்போது பெட்டிக்கடை முதல் அனைத்து கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

போட்டி கடுமையாக இருப்பதால் திருப்பூரில் தற்போது திரைப்பட நடிகர்கள், நடிகைகளின் படங்களோடு முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு பெரிய வரவேற்பும் ஏற்பட்டுள்ளது. 

 

 


கெடக்கறது கெடக்கட்டும்...  கெழவிய தூக்கி மனையில வை... என்கிற பழமொழிக்கு ஏற்றார் போல... புகைப்படங்களை முகக் கவசத்தில் அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கொண்டாடுகிறார்கள் வியாபாரிகள்.
 

 

ஆனால் இது ஆபத்தானது. இதனால் சுவாசத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, அதுமட்டுமில்லாமல் சாலையில் எதிரெதிராக செல்பவர்களின் கவனம் சிதறும், விபத்துகள் நேரிடும். எனவே இந்த முக கவசங்களை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Chief minister should resign EPS Emphasis

முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகச் செய்திகள் வந்த நிலையில், அதனைத் திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுத்து செய்தி வெளியிட்டது. ஆனால், தற்போது மாவடப்பு மலைக்கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் மதுவுடன் கள்ளச்சாராயம் கலந்து அருந்தியதால் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதிலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்க, அதிலிருந்து இந்த திமுக அரசு எந்த பாடமும் கற்றுக்கொள்ளாமல், மீண்டும் மீண்டும் மூடி மறைக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழும் போது ‘இனி இதுபோல் நடக்காது’ என்று முதல்வர் சொல்வதும், மீண்டும் கள்ளச்சாராயத்தால் மக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், இனியும் மு.க. ஸ்டாலின் முதல்வராகத் தொடர்வதில் எந்த தார்மீக அடிப்படையும் இல்லை. தமிழ்நாட்டில் நிலவும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கும் இதனால் சீரழியும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முழு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரயில் பயணிகளுக்கு மிரட்டல்; மேலும் 2 பேர் கைது!

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
chennai central to alappuzha expresstrain incident 

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு கடந்த 25 ஆம் தேதி இரவு விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை அடைந்ததும் மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள் முன்பதிவு பெட்டியில் ஏறியுள்ளனர். இந்த இளைஞர் ரயிலில் புகைப் பிடித்தபடியும், சத்தமாகப் பாட்டு படியபடியும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் அதிருப்தி அடைந்த ரயில் பயணிகள் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் இது தொடர்பாக தட்டிக்கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர்கள் பதிலுக்குப் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பயணிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் பெண் பயணி ஒருவரிடம் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். இதனையடுத்து திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்று விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து பெண் பயணியைத் தரக்குறைவாகப் பேசி, இளைஞர்கள் தாக்கிய வீடியோ வெளியானதை அடுத்து போலீசார் இது தொடர்பாக 17 வயது சிறுவன் மற்றும் அசோக் குமார் (வயது 20) என்ற இருவரைக் கைது செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சுடலைராஜ் மற்றும் கரண் என மேலும் 2 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.