/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/accident-art_0.jpg)
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் அருகே உள்ள திருவம்பலபுரம் கிராமம் தோட்டப்பள்ளி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் திருவம்பலபுரம் கிராமம் தோட்டபள்ளி அருகில் நேற்று (22.05.2024) அதிகாலை டிரக்கர் வாகனமும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் டிரக்கர் வாகனத்தில் பயணம் செய்த திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கரைசுத்துபுதூர் கிராமம், தெற்கு புலிமான்குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது மனைவி சந்தனகுமாரி (வயது 42) மற்றும் முருகேசன் என்பவரது மகள் முத்துச்செல்வி (வயது 30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தத்துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-mks-sad-art_10.jpg)
மேலும் இவ்விபத்தில் காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)