Skip to main content

வேட்டை தடுப்பு காவலரை தாக்கிய புலி; தெப்பக்காடு பழங்குடியின மக்களுக்கு எச்சரிக்கை

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

Tiger attacked anti-hunting guard; Warning to Theppakadu tribal people

 

நீலகிரி தெப்பக்காடு வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலர் புலியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கும்கி யானையின் உதவியுடன் புலியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் உள்ள தெப்பக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியினர் கிராமம் ஒன்றில் வேட்டைத் தடுப்பு காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் புலியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். இதுதொடர்பாக மற்ற வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் கும்கி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் புலியைத் தேடி வருகின்றனர்.

 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தெப்பக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியின மக்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

உதயநிதி சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Udayanidhi's helicopter flying force test

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நீலகிரி வந்திருந்தார். இந்நிலையில் அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.