Skip to main content

பெண் பயணியை அவமதித்த டிக்கெட் பரிசோதகர்; தட்டிக்கேட்ட ரயில்வே காவலர் இடமாற்றம்!

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

கடந்த ஜூலை 22ம் தேதி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் வியாபார நிமித்தாமாக கோவை வந்துள்ளார். தனது பணியை முடித்து விட்டு அன்று மதியமே தான் கொண்டு வந்த பாத்திரங்களுடன் கோவை சந்திப்பிலிருந்து சேலம் செல்ல ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார் மாரியம்மாள்.

அப்போது ரயிலில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த பத்மகுமார் மாரியம்மாளிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். அதற்கு மாரியம்மாள் டிக்கெட்டானது கணவரிடம் உள்ளது என்றும், அவர் முன்னே உள்ள இரயில் பெட்டியில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

 

railway

 

இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் பத்மகுமார் மாரியம்மாளை ரயிலை விட்டு இறங்கும்படி வற்புறுத்தியுள்ளார். மாரியம்மாள் டிக்கெட் பரிசோதகரிடம் தனது கணவரிடம் டிக்கெட்டை வாங்கி வருகிறேன் என சொன்னபோது பத்மகுமார் அவரை அநாகரீக வார்த்தையில் பேசி அவர் கொண்டு வந்த பாத்திரங்களை எட்டி உதைத்ததாக தெரிய வருகிறது.

இதைக் கண்ட பணியில் இருந்த ஆர்பிஎப் தலைமை காவலர் வீரமுத்து பயணிகளிடம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது. இது தவறான செயல் எனவும், இது நமது பணியல்ல எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த பத்மகுமார் எனக்கு அறிவுரை சொல்கிறாயா என்று காவலரிடம் பொது இடத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இரயில்வே காவலருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

railway


இந்த காட்சிகள் அனைத்தும் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்றது. ஆனால் பெண் பயணி என்றுகூட பாராமல் பொதுஇடத்தில் மனிதநேயமற்ற முறையில் செயல்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக டிக்கெட் பரிசோதகரின் செயல்பாட்டை தட்டிக்கேட்ட தலைமை காவலர் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

railway


பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர் வீரமுத்து பணியில் அமர்ந்தது முதல் 25 பவுன் தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்து உள்ளார். அதேபோல ரயில் நிலையத்தில் கீழே கிடந்த 12,500 ரூபாய் ,1500 ரூபாய் என விலை உயர்ந்த 9 செல்போன்கள், சுமார் 10 லட்சம் ரூபாய் வரைக்கும் மதிப்புடைய பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்து நற்பெயர் பெற்றுள்ளார்.

இப்படி ரயில்வேதுறைக்கும், காவல்துறைக்கும் நற்பெயர் எடுத்துக் கொடுத்து வந்த இந்த காவலர் மனிதநேயத்தோடு அநியாயத்தை தட்டிக் கேட்டதால் அவருக்கு ரயில்வேதுறை மறைமுகமாக மதுரை டிவிசனுக்கு இடமாற்றத்தை பரிசாக வழங்கி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆந்திராவில் இருந்து தென்மாநிலங்களுக்குக் கடத்தப்படும் கஞ்சா; சுற்றிவளைத்த தமிழக போலீஸ்

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
cannabis smuggled from Andhra, Telangana to Tamil Nadu, Karnataka, Kerala by car and train

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குக் கஞ்சா கடத்திய வரப்படுவதாக வந்த ரகசியத் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் தமிழக ஆந்திர எல்லையோரம் உள்ள வேலூர் மாவட்டம் சைணகுண்டா சோதனை சாவடி அருகே குடியாத்தம் தாலுகா போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 12 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது.  கஞ்சாவைக் கடத்தி வந்த குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த குடியரசன் (24) கோகுல்குமார் ( 26) மாதேஷ் (21) மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன்( 23) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட குடியரசன் மற்றும் கோகுல்குமார் ஆகிய இருவரும் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக டாடா நகர் பகுதியில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்தப்படுவதாக வேலூர் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அரக்கோணம் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல் துறையினருடன் இணைந்து ரயிலில் சோதனை மேற்கொண்டனர். 

முன்பக்க சாதாரண பெட்டியில் சந்தேகம் அளிக்கக் கூடிய வகையிலிருந்த நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 பாண்டல்களில் இருந்த சுமார் 14 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுப்ரமணியம் (21) மற்றும் அப்துல் (18) ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வனப்பகுதிகளில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளுக்குள் நுழைந்து மாநில இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கி வருகிறது. இதனைத் தடுக்க காவல்துறை பெரும் முயற்சிகள் எடுத்தாலும் கஞ்சா கடத்தி வருவதற்காக அனுப்பப்படும் குருவிகளுக்குத் தரப்படும் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் அவர்களை இந்த தொழிலைக் கச்சிதமாகச் செய்யவைக்கிறது. 

Next Story

சாராயம் காய்ச்சி குடித்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Published on 12/07/2024 | Edited on 13/07/2024
People admitted to hospital after drinking liquor

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன்(65).  அடுப்புக்கரி வியாபாரம் செய்து வரும் இவர் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக சாராயம் காய்ச்சி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் ஏழுமலைக்குத் தெரியவர, உடனடியாக  மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருடன் தேவன் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியுள்ளார்.

சோதனையில்  சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த ஊறல் மற்றும் காய்ச்சி வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றினர். மேலும் தேவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது, சாராயத்தைக் காய்ச்சி தன்னிடம் வேலை செய்யும் மணி, பெருமாள், அய்யனார், ராதா கிருஷ்ணன், மதுரை ஆகிய 5 பேருக்கு குடிக்கக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் அதில் 3 பேரை  பிடித்து முழு மருத்துவ பரிசோதனை செய்தனர். மூவருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று  மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கைக்காக அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எஞ்சியுள்ள 2 பேருடன் சேர்த்து 5 பேரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.