ஏற்காடு மலைப்பகுதியில் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் இருந்து சுமார் 40 பேருடன் சுற்றுலா பேருந்து ஒன்று ஏற்காட்டுக்கு வந்திருந்தது. அப்பொழுது ஏற்காட்டில் 14 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்தில் பிரேக் ஃபெயிலியர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கொண்டை ஊசி வளைவு தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக கீழே இறங்கினர். ஓட்டுநரின் சாமர்த்திய செயலால் பேருந்து பள்ளத்தில் விழாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சேலம் ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக சென்றதில் வளைவில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.