Skip to main content

உயிரிழந்த ஆசிரியர் தியாகராஜன் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்கவில்லை

Published on 08/05/2018 | Edited on 08/05/2018
jacto geo

 

 


சென்னையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்றும், அவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் பரவின. 
 

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் பணியாற்றியதாக கூறப்படும் கண் பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் என்பவர் பாபநாசம் ஒன்றியத்திலேயோ அல்லது தஞ்சாவூர் மாவட்டத்திலேயோ பணியாற்றவில்லை என தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 

 

thyagarajan


 

இறந்ததாக கூறப்படும் அவர் திருத்துறைப்பூண்டி அருகே பாலக்குறிச்சியில் வசித்து வரும் மற்றொரு கண் பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் ஆவார். இவர் நன்னிலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில்  சிறப்பாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு நெஞ்சு வலிக் காரணமாக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை  உயிரிழந்துள்ளார். 
 

அவர் உயிரிழந்த செய்தியை நன்னிலம் ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ளவே, அது அங்கு போராட்டத்தில் இருந்த ஆசிரியர்கள் மூலம் தவறாக போராட்டத்தில் இறந்து விட்டார் என ஊடகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் போராட்டத்திற்க்கு செல்லவில்லை என திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எஸ்.எஸ்.ஏ அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்