கோவிலில் இருக்கும் சாமியை விட அவருக்கு பூஜை செய்யும் பூசாரியை தான் நம் மக்கள் அதிகம் நம்புகிறார்கள். அவர்களின் அதீத நம்பிக்கையும், அதோடு வதந்தியும் சேர்ந்து கொண்டால் பல நேரங்களில் மக்களின் வாழ்க்கையே இழக்க செய்கிறது என்பதற்கு துறையூர் கோவில் திருவிழா 7 பேரை பலி கொண்டதே உதாரணம்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ளது முத்தையம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தையொட்டிய காட்டுப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் வாழ வைக்கும் வண்டிதுறை கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை தனபால் என்பவர் தனிப்பட்ட முறையில் நடத்தி வருகிறார்.
இவருக்கு சொந்த ஊர் திருச்சி மண்ணச்சநல்லூர். இவருக்கு மகேஷ்வரி என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அடிப்படையில் டெய்லரான இவர் தனக்கு ஆசாத்திய சக்தி இருக்கிறது என்று குறி சொல்ல ஆரம்பித்து சின்ன அளவில் மண்ணச்சநல்லூரிலும், துறையூரிலும் ஆரம்பித்து கடந்த சில வருடங்களாக துறையூர் கோவிலை குடும்பமாக இந்த கோவிலை நடத்தும் இவர்கள். இவரே இந்த கோவிலின் பூசாரியாகவும் உள்ளார். ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பூசாரி தனபால் சிறப்பு பூஜைகள் நடத்தி பில்லி சூனியம், ஏவல், திருமண தடை, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கம்.
இவர் அருள்வாக்கு சொல்கிறார் எல்லாத்தையும் அப்படியே சொல்கிறார் என்கிற விஷயம் கொஞ்சம் கொஞ்சம் வெளியே தெரியவர கூட்டம் அந்த அமாவாசை அன்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் அந்த காட்டுப்பகுதியில் நடக்கும் திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெற்ற ஆரம்பித்தது. இந்த திருவிழாக்காக திருச்சி, நாமக்கல், கரூர், விழுப்புரம், சேலம், கடலூர் என வடமாவட்டங்களில் இருந்து கூட்டம் அலை மோத ஆரம்பித்தது.
வழக்கமாக கோவில்களில் சாமி கொண்டிருந்த மக்களுக்கு தீடீர் என இந்த கோவிலை நடத்தும் பூசாரி தனபால் பிடிக்காசு என்கிற பெயரில் சில்லரை காசுகளை வருகிற அனைத்து மக்களுக்கும் கொடுப்பார் அந்த பூசாரி கொடுக்கும் சில்லரை காசுகளை வாங்கி வீட்டில் கொண்டு போய் வைத்தால் செல்லம் செழிக்கும் என்று அவர் சொல்லும் வேத வாக்கு மக்களுக்கு பெரிய நம்பிக்கை ஏற்படுத்த ஆரம்பித்தது. அதனால் திருவிழாவில் இந்த பிடிக்காசு என்கிற திருவிழாவிற்கு கூட்டம் இலட்ச கணக்கில் கூட ஆரம்பித்தது.
இந்த பிடிக்காசு நம் வாழ்க்கையை வளமாக்கும் என்கிற நம்பிக்கையிருந்ததால் ஒவ்வொரு அமாவாசை பூஜையும் பிரபலமானது. இதனால் வெள்ளிக்கிழமை சித்ரா பவுர்ணமியன்று கருப்பு கோவிலில் பூசாரி தனபால் சிறப்பு பூஜைகள் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக அங்கு கீற்றுகளினால் ஆன பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் தங்கி இருந்த பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்து பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் பூசாரியிடம் பிடிக்காசு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆண்கள், பெண்கள் வரிசையில் நின்றனர்.
பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று பிடிக்காசு வாங்கி செல்வதற்கு வசதியாக ஒரு குறிப்பிட்ட பகுதி வரை சவுக்கு கட்டைகளால் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இரும்பு குழாய்களால் ஆன ‘பேரிகாட்’களையும் போலீசார் அமைத்து இருந்தனர். ஆனால் பக்தர்கள் அதை எல்லாம் தாண்டி நீண்ட தூரம் வரை நின்று கொண்டிருந்தனர். பூசாரி தனபால் பக்தர்களுக்கு பிடிக்காசுகளை வழங்கி கொண்டிருந்தார்.
காலை 9 மணி அளவில் பிடிக்காசு பெறுவதில் பக்தர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதற்கு இடையே பூசாரி கொடுத்துக்கொண்டிருந்த பிடிக்காசு தீந்து போக போகிறதாம் என்கிற பேச்சு அங்கே வதந்தியாக கிளம்ப ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு முன்னே செல்ல முயன்றனர். வெளியே இருந்த சிலர் வரிசையை மீறி உள்ளே நுழைய ஆரம்பித்தனர். இதனால் அந்த பகுதியே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பக்தர்கள் கீழே விழுந்து விடவும். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் ‘பேரிகாட்’ ஒன்று சரிந்து விழுந்தது. அதற்கு அடியில் சிலர் சிக்கி அய்யோ அம்மா என அலறினர். பிடிக்சாசு தீர்ந்து போக போகிறது எப்படியும் வாங்கிவிடனும் என்கிற ஆர்வத்தில் ஆனால் அதனை பொருட்படுத்தாது பலர் முன்னே செல்ல முயன்றனர். இதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக்கொண்டு சென்றனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் மாறியது. கூட்ட நெரிசலில் சிக்கியும், மூச்சு திணறியும் 4 பெண்கள் உள்பட 7 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
7 பேர் பலிக்கு பிறகு அங்கு வந்திருந்த பக்தர்கள் சிலர் கோவிலில் முறைப்படி அனுமதி பெற்று பிடிக்காசு வழங்கும் விழா நடத்தப்படவில்லை ஆயிரக்கணக்கானவர்கள் கூடி நின்ற இடத்தில் போலீசார் போதுமான அளவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. இவ்வளவு கூட்டம் கூடும் என்று எதிர்பார்த்தும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் முறையான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்று குற்றசாட்டு சொல்லி புலம்ப ஆரம்பித்தனர்.
இந்த பிடிக்காசு திருவிழாவிற்கு டி.எஸ்.பி. குணசேகரன் தலைமையில் துறையூர் இன்ஸ்பெக்டர் குமரகுரு மேற்பாறையில் 3 இன்ஸ்பெக்டர்கள் 16 சப் இன்ஸ்பெக்டர்கள் சுமார் 150 போலிசார் பாதுகாப்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடதக்கது.
விபத்து நடந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மத்திய மண்டல ஐஜி வரதராஜீலு, மாவட்ட கண்காணிப்பாளர் ஜீயாவுதீன்வுல்ஹக், ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
இறந்து போன குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் மோடி கொடுத்த உதவி பணம் மட்டுமே மிச்சம். 7 பேர் பலி சம்பவத்தில் பூசாரி தனபால் மீது எதிபாரத நடந்த விபத்திற்கு காரணமாக இருத்தல் என்கிற பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். எதிர்கால வாழ்வை வளமாக்கும் என்று நம்பி சென்ற மக்களுக்கு எதிர்காலமே இழந்து நிற்கும் அந்த குடும்பத்திரை நினைக்கும் போது பரிதாபமாக தான் இருக்கிறது.