Skip to main content

அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

nn

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாகத் தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,  தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இரவு நேரங்களில் திடீர் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் மிதமான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மிக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி அடுத்த இரண்டு நாட்களில் ஒடிசா மற்றும் சட்டீஷ்கரை நோக்கி நகர உள்ளது. அதேநேரம் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஏற்கனவே பல இடங்களில் மிதமான மழை பொழிந்து வரும் நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Chance of rain for 6 days in Tamil Nadu

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (12.12.2023) முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று (11.12.2023) காலை வரை இயல்பைவிட 3 சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று காலை வரை இயல்பாக 398.3 மி.மீ. மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 385.3 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. அதே சமயம் சென்னையில் வடகிழக்கு பருவமழை 47 சதவிகிதம் அதிகமாகப் பெய்துள்ளது. அதாவது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை இயல்பாக 731.9 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1079 மி.மீ. மழை பதிவாகியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் அறிவிப்பு

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Chance of rain in 8 districts Meteorological Department Notification

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீலகிரி, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.