கோவை கார் சிலிண்டர் வெடிப்புவழக்கு தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகேஅக்டோபர்23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், என்.ஐ.ஏ. எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் முபின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையோர்கள் என இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில்தற்போது மேலும் மூன்று பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முகமது தவ்ஃபிக், உமர் ஃபரூக், ஃபெரோஸ்கான் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் கைது செய்யப்பட்ட மூவரையும் தற்போதுஎன்.ஐ.ஏ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்துவிசாரித்து வருகின்றனர். இவர்களுக்கும் குண்டு வெடிப்பு நிகழ்விற்கும் என்னசம்பந்தம் இருக்கிறது என்பதை விசாரணையில் கண்டு கொண்டு தொடர்ந்து மூவரும்சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.