Skip to main content

அடுத்தடுத்து மூன்று கொலை... 'க்ரைம்' நகரமாக மாறும் 'பெரம்பலூர்'!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

mani


அடுத்தடுத்து மூன்று கொலை நடந்ததால் மீண்டும் குற்றங்கள் நடக்கும் நகரமாக பெரம்பலூர் மாறி வருகிறதா எனப் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 
 


சம்பவம்   1 : பால் வியாபாரியை அடித்துக்கொன்ற ரவுடி

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி மணி (வயது.55). த/பெ சுப்பரமணி. இவர் தெரணி கிராமத்தில் பால் வியாபாரம் மற்றும் பஞ்சர் தொழில் செய்து வருகின்றார். இதே கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி தனபால் (வயது.50), த/பெ ஜெயராமன், குமார் (வயது.40) த/பெ கந்தன், சங்கர் (வயது.35) த/பெ பொன்ணுசாமி, குண்டு பிரபு (வயது.40) த/பெ பொன்னணுசாமி இவர்கள் நால்வரும் திட்டமிட்டு கடந்த மே.29 -ஆம் தேதி மதியம் 3 மணியளவில் பால் வியாபாரி மணியை பால் கறந்ததற்கான கூலி தறுவாதகக் கூறி பிரபுவின் வயலுக்கு அழைத்துச் சென்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசி நால்வரும் மூர்க்கமாக மணியை உருட்டு கட்டையால்  தாக்கியுள்ளனர். 

இதில் நிலை தடுமாறிய மணி சம்பவ இடத்திலேயே மயக்கமானார். பின் அந்த இடத்தை விட்டு வெளியே வந்த தனபால் பட்டாக் கத்தியுடன் தெருவில் இறங்கி இந்தச் செய்தி பற்றி போலீசாருக்கு யாராவது தகவல் கொடுத்தால் அவர்கள் குடும்பத்தையே அழித்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் காயமடைந்த மணியை, அவரது குடும்பத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை மேற்கொள்ள முடியாத காரணத்தால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அடுத்த நாள் பாடாலூர் காவல்நிலையத்துக்கு வந்த ரகசிய தொலைபேசி மூலம் காவல் துறையினர் தனபாலை தேடி வந்தனர். இரண்டு நாட்களாக தேடியும் தனபாலை பிடிக்க முடியவில்லை. ஜீன்.1-ஆம் தேதி மதியம் 1 மணியளவில் தனபால் பாடாலூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தான். பின் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்திவருகின்றனர். காயமடைந்த மணி சிகிச்சை பலன்றி ஜீன்.1-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மரணமடைந்தார். 
 

 

 incident  - police investigation - perambalur district


சம்பவம்   2 :  ஒரு தலை காதலால் பெண்ணிடம் தகராறு செய்த ரெளடி கழுத்தறுத்து கொலை 

பெரம்பலூரில் கே.கே. நகரைச் சேர்ந்தவர் ரவுடி கபிலன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையிலுள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகள் லாவன்யாவை கபிலன் ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் லாவன்யா குடும்பத்தாருடன் ஏற்பட்ட தகராரில் கைதாகி சிறையிலிருந்த கபிலன் தற்போது சிறையிலிருந்து வெளிவந்திருந்ததாகத் தெரிகிறது. 

இந்நிலையில் கபிலன் மீண்டும் லாவன்யாவைச் சந்தித்து பிரச்சனை செய்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற லாவண்யாவின் சகோதரன் குணசேகரன் மற்றும் லாவன்யாவின் அக்கா கணவர் அரவிந்த் ஆகிய இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து இரவு குடிபோதையில் இருந்த கபிலனை தாக்கி அவன் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் படுகாயமுற்ற கபிலன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.  

இது தொடர்பாக வழக்குப் பதிந்த பெரம்பலூர் போலீசார் கொலையில் தொடர்புடைய லாவன்யாவின் தந்தை சுப்பிரமணியன், தாய் தனலட்சுமி சகோதரன் குணசேகரன், உறவினர் அரவிந்த், மற்றும் நண்பர்கள் உட்பட 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவுடி கபிலன் பல்வேறு குற்றவழக்கில் ஈடுபட்டு கைதாகி சேலம் சிறையிலுள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அழகிரியின் ஆதரவாளன் என்பது குறிப்பிடதக்கது. 
 

 

 incident  - police investigation - perambalur district


சம்பவம்   3 : அ.ம.மு.க. நிர்வாகி கொடூரமாக வெட்டிப் படுகொலை.

பெரம்பலூர் சங்கு பேட்டையைச் சேர்ந்தவர் பாண்டி (எ) வல்லத்தரசு (22). அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் நகர மாணவரணிச் செயலாளராகப் பொறுப்பில் உள்ள இவர் பெரம்பலூர் - விளாமுத்தூர் சாலையில் வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். செய்தி அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பாண்டியன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் ஏற்பட்டிருந்த முன் விரோதமே கொலைக்கான காரணம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கொலைக்கு அரசியல் பின்னணி காரணமா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார். இதனிடையே கொலை செய்யப்பட்ட பாண்டியுடன் இருந்த சூர்யா என்கிற அவனது நண்பன் தலையில் வெட்டுக் காயத்துடன் கொலையாளிகளிடமிருந்து தப்பி வந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 4 தினங்களில் மட்டும் அடுத்தடுத்து நடந்துள்ள இந்தக் கொடூர கொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.எம். மாவட்டச் செயற்குழுவைச் சேர்ந்த செல்லத்துறை கூறும்போது, பெரம்பலூர் நகரில் அடுத்தடுத்து தொடர் கொலைகள் நடந்துள்ளதால் நகர மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த 27 வயது கபிலன் என்பவர் கடந்த 1 ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளன. மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே  இந்தக் கொலை நடந்துள்ளது.

அதேபோன்று பெரம்பலூர் நகரில் உள்ள சங்குப்பேட்டையைச் சேர்ந்த வல்லத்தரசு விளாமுத்தூர் சாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று பாடாலூர் அருகே உள்ள தெரணி என்ற ஊரைச்சேர்ந்த பால்காரர் மணி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படி அடுத்தடுத்து நடைபெறும் தொடர் கொலைகளால் பெரம்பலூர் நகரப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் பீதியிலும் உள்ளனர்.

சமீபகாலமாக பெரம்பலூர் நகரில் ரவுடியிசம் அதிகரித்து வருகிறது. மேலும் தொடர் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவம் அதிகரித்துள்ளது மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அலட்சியப் போக்குடன் இருப்பதால்தான் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெரம்பலூரில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் காவல்துறை மெத்தனமாக உள்ளது. எனவேதான் தமிழக முதலமைச்சர் தலையிட்டு பெரம்பலூர் மக்களின் அச்சத்தையும் பீதியையும் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என்கிறார் சி.பி.எம். கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லத்துரை.
 

perambalur sp nisha parthipan


மாவட்ட தலைநகரமாக உள்ள பெரம்பலூருக்குப் பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்களும் நகரத்தில் வாழும் மக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இவர்களுடைய அச்சத்தைப் போக்கி நிம்மதியாக மக்கள் வாழும் நகரமாக காவல்துறை உருவாக்குமா? இந்தத் தொடர் கொலைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. விஷா பார்த்திபன் அவர்களிடம் கேட்டோம்.
 

http://onelink.to/nknapp


தெரணியில் நடத்த கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சரணடைந்துள்ளனர். கபிலன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம். பாண்டி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்காகத் தனிப்படை தேடி வருகிறது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். மேலும் மாவட்டத்திலும் பெரம்பலூர் நகரத்திலும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ரவுடியிசம் தலை தூக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கபடும். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்கிறார் எஸ்.பி. நிஷா பார்த்திபன். 

 

 

சார்ந்த செய்திகள்