/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2994.jpg)
இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளின் வரலாற்றையும் அவர்களை நினைவு கூறும் வகையிலும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் 7 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி நேற்று (வியாழன்) நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளி மைதானத்தில் தொடங்கியது.
முதல் நாள் விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்களை திறந்து வைத்து அதை மாணவ மாணவிகளின் பார்வைக்கு விடப்பட்டது. மேலும் சமூக நலத்துறை, மகளீர் சுய உதவிக்குழு, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வைக்கபட்ட படைப்புகளை மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பரதநாட்டியம், பறை இசை நடனம், மல்லர் கம்பம், போன்றவை நடந்தது. மேலும் மழளையர் பள்ளி குழந்தைகள் தேசத் தலைவர்களின் வேடங்களை அணிந்து அசத்தினார்கள்.
இதில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது என்றும் அதன் தீமைகள் குறித்தும் பேசினார். மாணவா்கள் கல்வியை முன் வைத்து சாதனைகளை படைக்க வேண்டும் என்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பேசினார்.
இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக இன்று (வெள்ளி) பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடந்தது. இதில் ஆனந்தராஜ், ரம்யா முதல் இடத்தையும், அஜித், கரிஷ்மா இரண்டாம் இடத்தையும் அனிஸ்லின், நிக்சன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியா் பரிசுகளை வழங்கினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)