Skip to main content

போலி நகை அடமானம் வைத்தால் ஆயிரம் ரூபாய்; சிக்கிய பெண் சொன்ன அதிர்ச்சி தகவல்

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

A thousand rupees if you mortgage fake jewelry! Shocking information told by the trapped woman!

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கல்லூர் பகுதியில் மோதிலால் என்பவர் நகைக்கடை மற்றும் வட்டி கடை ஒன்று நடத்தி வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் இவரது கடைக்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களிடமிருந்த வளையல் நகையை அடமானம் வைத்துள்ளனர். அந்த நகையை மோதிலால் பரிசோதனை செய்து பார்த்தபோது அது தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகை என்பது தெரிய வந்தது. உடனே மோதிலால், ராமநத்தம் போலீசாருக்கு ரகசியமான முறையில் தகவல் தெரிவித்துள்ளார். 

 

உடனே போலீசார், மோதிலாலின் அடகு கடைக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டு இரண்டு பெண்களில் ஒருவர் தப்பித்துச் சென்றார். ஒரு பெண்ணை மடக்கி கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ரோஸ்லின்(56) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தப் பெண் சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் கெங்கராம்பாளையம், சிறுபாக்கம் ஆகிய பகுதிகளில் போலி நகைகளை அடமானம் வைத்து ஏமாற்றி பணம் பறித்துச் சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. 

 

இதுபோன்று சேலம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு திருட்டு கும்பல் மற்றும் பெண்களைக் கொண்டு போலி நகைகளை அடமானம் வைத்துப் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அந்த கும்பல் இவர்கள் அடமானம் வைத்து கொடுக்கும் பணத்தில் ஆயிரம் ரூபாய் கமிஷனாக தருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரோஸ்லின் என்ற பெண்ணுடன் வந்த ஒரு பெண் மற்றும் சில ஆண்கள் ஒரு ஆம்னி வேனில் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.