Those who tried to sell Sami idols abroad were arrested!

சாமி சிலைகளை வெளிநாட்டிற்கு விற்க முயன்ற இரண்டு பேரை சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சாமி சிலைகளை வெளிநாட்டிற்கு விற்க முயற்சிப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், அவர்களிடம் சிலைகளை வாங்குவது போல் பேசினர். அப்போது, சரஸ்வதி, லட்சுமி ஆகிய சிலைகளை இரண்டு கோடி ரூபாய்க்கு விலைபேசிவிட்டு, கடத்தல்காரர்களை சுவாமிமலைக்கு வரவழைத்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

Advertisment

திருடப்பட்ட சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது என்பது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.