Skip to main content

‘20 ஆண்டுகள் சிறையில் கழித்தவர்களை விடுதலை செய்ய வேண்டும்’ - தமிமுன் அன்சாரி

Published on 06/08/2023 | Edited on 06/08/2023

 

Those who spent 20 years in jail should be freed says Thamimun Ansari

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கடலூர் சிறை நிரப்புப் போராட்டம், கடலூர் கெடிலம் ஆற்றுக்கரையில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தோழர் தியாகு, கடலூர் துணை மேயர் வி.சி.க, பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக போராட்டத்தை கடலூர் உழவர் சந்தை பகுதியில் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. காவல்துறை கடைசி வரை அந்த இடத்தை தர மறுக்க, இறுதியாக ஆற்றுக் கரையில் நடத்த அனுமதி வழங்கியது. ஆரம்பம் முதலே போராட்டக்காரர்கள் உடன் காவல்துறையினர் கெடுபிடியுடனே நடந்து கொண்டு இருந்தனர். காவல்துறை ஆய்வாளர் கவிதா அவர்கள் சற்று வேகமாக மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை அழைக்க கட்சியின் தொண்டர்கள் காவல்துறை ஆய்வாளர் கவிதா மீது கோபப்பட ஆரம்பித்தனர். 

 

Those who spent 20 years in jail should be freed says Thamimun Ansari

 

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன், “கடந்த வாரம் நடந்த விரும்பத்தகாத ஒரு செயலால் காவல்துறையினில் இறுக்கமான நிலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதற்காக ஜனநாயக முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கு இவ்வளவு கெடுபிடி கொடுத்து அக்கட்சியினரிடம் கெடுபிடி காட்டுவது ஏற்புடையது அல்ல என்றும், நாங்கள் ஆளும் கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் எங்களிடத்திலே காவல்துறை இவ்வளவு கெடுபிடி காட்டுவது தவறு என்றும், இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதுதான் எங்களது நோக்கமாக இருக்கும், இந்தப் போராட்டத்தில் சிறு தவறு நடந்து அதை எங்களது தலைமையிலான கூட்டணி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த விடமாட்டோம் என்று கூறி காவல்துறையினர் போராட்டக்காரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

மேலும் “திமுக கூட்டணிக்கு ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி ஒற்றைக் கோரிக்கையோடு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவு கொடுத்தவர் தமிமுன் அன்சாரி. நானும் அவரும் இணைந்து சிறைவாசிகள் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளோம். தமிழக முதல்வர் ஸ்டாலின்  சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகள், இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என கேட்டுக்கொண்டார்.

 

அவரைத் தொடர்ந்து பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, நோயாளிகளான சிறைவாசிகளின் சிகிச்சைக்குக்கூட வழியில்லாத சூழல் உருவாகியுள்ளது. நாங்கள் இஸ்லாமிய சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்யச் சொல்லவில்லை. 20 ஆண்டுகள் கழித்த அனைத்து மத, சாதியினரையும் எந்தவித பாரபட்சமில்லாமல் விடுதலை செய்ய சொல்கிறோம். இந்த விடுதலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் உள்ளனர் என மேற்கொள் காட்டினார்.

 

பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு தலைவர்கள் பேசியவுடன், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்ப்புலிகள் விடுதலைக்கட்சி தலைவர் குடந்தை அரசன், தோழர் வெங்கட்ராமன் மற்றும் அக்கட்சியின் மாநில செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விரைவில் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' - தமிழக முதல்வர் பேச்சு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
'Stalin's Voice at Home' Project - Tamil Nadu Chief Minister's Speech

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''மக்களவைத் தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களின் செயல்பாடு வரை தலைமைக்குத் தெரியும். 4000-க்கும் அதிகமான கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை குழுவிற்கு வந்துள்ளது. வரும் பிப்ரவரி 26 முதல் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் வீடு வீடாகச் செல்லும் பரப்புரை ஆரம்பிக்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு பல மாற்றங்களை திமுகவிலும், அரசிலும் எதிர்பார்க்கலாம்'' என தெரிவித்துள்ளார்.

Next Story

மக்களைத் தேடி தி.மு.க; அதிகாரிகளைத் தேடி அ.தி.மு.க - சூடு பிடிக்கும் பாராளுமன்றத் தேர்தல் களம்! 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
AIADMK DMK is competing attracting people as parliamentary elections are coming up

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களை முன்னிலைப் படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக மக்களைத் தேடி பேரூராட்சி என்று திட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஒவ்வொரு வார்டுக்கு பகுதிக்கும் சென்று பொதுமக்களிடம் குறை கேட்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

கே.கே நகர் பகுதியில் எரியாத மின்விளக்குகள் திமுகவினர் குறை கேட்கச் சென்ற மறுநாளே 26 இடங்களில் பளிச்சென விளக்கு எரியத் தொடங்கியது. இந்த விஷயம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து திமுகவினர் பல்வேறு பகுதிகளிலும் வேகம் காட்டி வருகின்றனர். சுதாரித்துக் கொண்ட அதிமுகவினர் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க அதிகாரிகளை தேடி அதிமுக என்ற திட்டத்துடன் வத்தலக்குண்டு பேரூராட்சி பகுதியில் முக்கிய பிரச்சினைகளை கையில் எடுத்து அது சார்ந்த பொதுமக்களை அழைத்துக் கொண்டு அதிகாரிகளை தேடிச் சென்று மனு கொடுக்கும் நிகழ்வை தொடங்கியுள்ளனர்.

AIADMK DMK is competing attracting people as parliamentary elections are coming up

காந்திநகர் பகுதியில் நீண்ட நாள் பிரச்சினையாக இருக்கும் குறைந்த கிலோ வாட் டிரான்ஸ்பார்மரை அதிக கிலோ வாட் ட்ரான்ஸ்ஃபராக மாற்றி அமைத்து தர வேண்டும் என நகர அதிமுக நகர சிறுபான்மையின் அணி அமைப்பாளர் நாகூர் கனி தலைமையிலான அதிமுகவினர் மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். 

தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் மக்களை நேரடியாக சந்திக்கும்போது எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தற்போது தங்களை தயார்படுத்தி வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.