Published on 18/05/2022 | Edited on 18/05/2022
கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22, 23 தேதிகளில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் தூத்துக்குடி கடற்கரை சாலையிலுள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வந்தார். இந்த ஆணையத்தின் சார்பில் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தார்.