Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - ஆணைய விசாரணை நிறைவு!

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

தச

 

கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22, 23 தேதிகளில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி கடற்கரை சாலையிலுள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகிறார்.

 

இந்த ஆணையத்தின் சார்பில் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இடையில் தமிழ்நாட்டில் திமுக  ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், கடந்த மே 14ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த இடைக்கால விசாரணை அறிக்கையை இந்த ஆணையம் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது. அப்போது மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆணையம் தற்போது விசாரணையை நிறைவு செய்துள்ளது. 3 மாதத்தில் விசாரணை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட இருப்பதாக ஒருநபர் விசாரணை கமிஷன் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகரன் தெரிவித்துள்ளார். இதுவரை அருணை ஜெகதீசன் ஆணையம் இதுவரை 1048 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தீஸ் சிலை திறப்பு

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

Inauguration of Cruz Fernandes statue in Tuticorin

 

தூத்துக்குடி மாநகரின் தந்தை என அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக நாளை திறந்து வைக்க உள்ளார்.

 

இது குறித்து அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் தூத்துக்குடியில் கடந்த 1869 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி (15.11.1869) பிறந்தார். அறிவுத் திறமையும், அறிவுக் கூர்மையும் கொண்டவர். உழைப்பால் உயர்ந்தவர். ஈடுபடும் செயலில் இடர்களும் தடைகளும் தொடர்ந்தாலும், அச்செயல் பலருக்கு பயன்படும் எனில், அதனை செய்து முடித்து வெற்றி காணும் மன உறுதி கொண்டவர்.

 

தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909 இல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்  மக்களின் பேராதரவுடன் ஐந்து முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக விளங்கியுள்ளார். கடற்கரை நகரமான தூத்துக்குடி நீண்ட நெடுங்காலமாகவே குடிநீர் பிரச்சனையால் சிரமப்பட்டு வந்துள்ளது. 1927 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன், நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார்.

 

Inauguration of Cruz Fernandes statue in Tuticorin

 

இந்தக் குடிநீர்ப் பிரச்சனைகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் ‘தூத்துக்குடி மக்களின் தந்தை’ என போற்றப்படுகிறார். இத்தகைய மாமனிதர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸை போற்றும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் கடந்த 13.11.2021 அன்று அறிவிக்கப்பட்டு, கடந்த 14.10.2022 அன்று உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77.87 லட்சம் ரூபாய் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸுக்கு குவிமாடத்துடன் கூடிய உருவச் சிலையினை நாளை (14.11.2023) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தமைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

மணிப்பூர் கலவரம்; கண்டவுடன் சுட உத்தரவு

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

Governor orders to shoot rioters on sight in Manipur

 

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. முன்னதாக மணிப்பூர் கலவரம் குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது. தயவு செய்து உதவுங்கள்” எனப் பதிவிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை டேக் செய்திருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், “இந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் வன்முறைகள் நடந்துள்ளன. இவை இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தவறான புரிதல்களால் நடந்துள்ளன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்றார். இந்த நிலையில் கலவரக்காரர்களைக் கண்டவுடன் சுட, அம்மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து கலவரம் நீடித்து வரும் நிலையில் கலவரத்தைக் கட்டுப்படுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.