
திருவாரூரில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவராக கேரளாவை சேர்ந்த சிந்து என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தான் பணியாற்றி வரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே நேற்று காலை அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் காய்ச்சல் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிந்து, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.