Published on 09/04/2020 | Edited on 09/04/2020
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகப் பதிவாளர் புவனேஸ்வரி அறிவித்துள்ளார். மேலும் தேர்வுக்கான தேதியும், பல்கலைக்கழகம் திறக்கப்படும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு ஏப்ரல் 27 ஆம் தேதி வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.இந்தச் சூழலில்,தேர்வு ஒத்திவைப்பு தொடர்பான அறிவிப்பை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.