திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், செய்யார், பெரணமல்லூர், தெள்ளார், அனக்காவூர், வெம்பாக்கம் என 9 ஒன்றியங்களில் ஊராட்சி மன்ற தேர்தல் இன்று நடைபெற்றது. 1930 வாக்குசாவடி மையங்களில், 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 181 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 498 கிராம ஊராட்சித்; தலைவர் பதவியிடங்களுக்கும் மற்றும் 3480 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வாக்குபதிவு நடைபெற்றது.

thiruvannamalai polling

Advertisment

Advertisment

முதல் கட்டத்தில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 8,65,259 பேர். இதில் மதியம் 2 மணி நிலவரப்படி 34 சதவிதம் பேர் வாக்களித்தனர். அதாவது சுமார் 3 லட்சம் பேர் வாக்களித்தனர். பதட்டமான வாக்குசாவடிகள் என கண்டறியப்பட்ட 200 அதிகமான வாக்குசாவடிகளில் காவல்துறையின் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. அதோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இருந்து வரவைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் தேர்தல் நடைபெறும் ஒன்றியங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.வழக்கமாக உள்ளாட்சி தேர்தல்களில் வாக்குபதிவு அதிகமாக இருக்கும் இப்பகுதியில், இந்த உள்ளாட்சி தேர்தலில் மிக குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.