d

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் சார்பில் மீன் வளர்க்கப்படுகிறது. இந்த மீன்களை பிடிக்க 5 ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2018 ஜீலை மாதம் ஏலம்விடப்பட்டது. திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மீன் பிடிப்பதற்கான ஏலம் எடுத்துள்ளார்.

Advertisment

பரந்து விரிந்த அணையில் வெளியாட்கள் திருட்டு தனமாக மீன் பிடிப்பது வழக்கம். அதனை கண்டுபிடித்து தடுக்க ஒப்பந்ததாரர் கார்த்திகேயன் 5 இளைஞர்களை தினக்கூலி அடிப்படையில் அணையில் வேலைக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் தினமும் படகில் அணையை சுற்றி வருவர்.

கடந்த 18.1.2019ந்தேதி மாலை 4 மணிக்கு, சிலம்பரசன், முனியப்பன், சுந்தரேஷ், மூர்த்தி, செந்தில் ஆகிய 5 பேர் மோட்டார் படகில் அணையில் காவல் பணியில் ஈடுப்பட்டு அணையை வலம் வந்துக்கொண்டு இருந்துள்ளார்கள். அப்போது, கொடிகம்பம், ஆணைமங்களம், போயம்பள்ளிதண்டா, மண்ணாண்டிப்பட்டி தண்டா, தாழையூத்து, புளியம்பட்டி, அரட்டவாடியை சேர்ந்த 50 பேர் அணையில் திருட்டு தனமாக வலை வீசி மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார்கள்.

Advertisment

இதைப்பார்த்துவிட்ட ரோந்து பணியில் இருந்தவர்கள் சத்தம் போட, மீன் பிடித்துக்கொண்டு இருந்தவர்கள் இவர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். அதோடு வலையை வீசி அவர்களை அணையில் தள்ளியுள்ளனர். அதோடு, மீன்பிடி படகில் இருந்த இன்ஜீனை கழட்டி ஆற்றில் விட்டுள்ளார்கள். 5 பேரை அடித்து உதைத்துள்ளனர்.

அந்த கும்பலிடம்மிருந்து சிலம்பரசன், முனியப்பன், மூர்த்தி ஆகியோர் அவர்களிடம்மிருந்து தப்பி நிச்சல் அடித்து கரையின் மறுப்பக்கம் வந்துள்ளனர். செந்தில், சுந்தரேஷ் மட்டும் வரவில்லை. அதன்பின்பே அவர்கள் நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளது அந்த கும்பல் எனத்தெரிந்து இதுப்பற்றி ஓப்பந்ததாரர் கார்த்திகேயன்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர் அதிர்ந்துப்போய் இதுப்பற்றி மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இருதரப்பும் சேர்ந்து காவல்துறையில் புகார் தந்ததன் அடிப்படையில் ஜனவரி 19ந்தேதி மதியம் முதல் இருவரின் உடல் தேடும் பணி சாத்தனூர் அணையின் உள்பக்கத்தில் தீயணைப்பு வீரர்கள் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குவிந்துள்ளனர்.

அந்த இரு இளைஞர்கள் கொலைக்கு காரணமான திருட்டு தனமாக மீன் பிடித்தவர்கள் யார், யார் என 30க்கும் மேற்பட்டவர்களை பிடித்து வந்து சாத்தனூர்அணை மற்றும் செங்கம் போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். திருட்டு மீன் பிடிப்பவர்கள் ரோந்து சென்றவர்களை கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.