காவல் விவகாரம் தொடர்பாக வீட்டுக்கு தீ வைத்து பொருடகளை அடித்து சூறையாடிய கும்பலை மடக்கிப் பிடித்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் அதேபகுதியில் உள்ள காமராஜ்புரம் கிராமத்தை சேர்ந்த திருப்பதி என்ற இளைஞரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகம் என்று கூறப்படுகிறது. இதனால் பெண்ணின் குடும்பத்தார் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு சந்தியாவுக்கு மாப்பிள்ளை பார்க்கவும் துவங்கியுள்ளனர். இந்நிலையில் சந்தியா ஜீன் 13-ந் தேதி காலை வீட்டில் இல்லை எனவும் அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. அந்த காதலனும் வீட்டில் இல்லையாம்.
இருவரும் தலைமறைவாகிவிட்டார்கள், தங்களது குடும்ப மரியாதை போய்விட்டதென ஜீன் 13 ந் தேதி இரவு சந்தியா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சுமார் 50 பேர், திருப்பதி வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை அடித்து உடைத்து சூறையாடியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார்க்கு தகவல் கிடைத்து சம்பவயிடத்துக்கு சென்றதும் பிரச்சனை செய்தவர்களை மடக்கி பிடித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.