திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே கரும்புளியூத்து என்ற இடத்தில் இன்று காலை லாரி மீது கார் மோதியதில் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகில் உள்ள, "கரும்புளியூத்து" என்னும் இடத்தில், நெல்லை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில், இன்று (30-4-2019) அதிகாலையில், தென்காசியில் இருந்து, நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த லாரியும், நெல்லையில் இருந்து, தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த காரும், "நேருக்கு நேர்" மோதியதால் ஏற்பட்ட, கோரவிபத்தில், ஒரு குழந்தை உட்பட 4 பேர், சம்பவ இடத்திலேயே, உடல் நசுங்கி, இறந்து போனார்கள். இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ள, மேலும் சிலரை மீட்கும் பணிகளில், தீயணைப்பு வீரர்கள், முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். தூக்க கலக்கத்தில், ஓட்டுநர்களின் கவனக்குறைவினால், இந்த பரிதாப சம்பவம் நிகழந்ததாக, விபத்தை நேரில் பார்த்தவர்கள், செய்தியாளரிடம் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து, போக்குவரத்து காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக, விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த முருகன் மகனுடைய திருமணம் நேற்று கொக்கிரகுளம் ரோஸ் மஹாலில் நடைபெற்றது. திருமண விருந்து இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் முருகன் மற்றும் அவரது மகளின் கணவர்கள் இருவர் உடன் அவரது மற்றொரு உறவினர் ஆகியோர் காரில் அடைக்கல பட்டினத்திற்கு கறி வாங்குவதற்காக சென்றுள்ள நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இறந்தவர்கள்:
1. முருகன் 52/19,
த.பெ.பொன்னையா,
KTC நகர், நெல்லை.
2. நிரஞ்சன் குமார் 28/19,
த.பெ.ஜெயராஜ்,
KTC நகர், நெல்லை.
3. ராஜசேகர் 35/19,
த.பெ.முத்துசாமி,
KTC நகர், நெல்லை.
4. தனிக்கா 3/19,
த.பெ.ராஜசேகர்,
KTC நகர், நெல்லை.
5 . நடராஜன்
