Skip to main content

உச்சநீதிமன்றத் தீர்ப்பு - திருமாவளவன் வரவேற்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Thirumavalavan welcome's Supreme Court Verdict
கோப்புப் படம்

தென்னக ரயில்வேயில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று திருச்சி அரிஸ்டோர் ரவுண்டானத்தில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கல்யாணசுந்தரம், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வைத்தியலிங்கம், செல்வராஜ் மற்றும் தென்னக ரயில்வேயின் முதன்மை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தென்னக ரயில்வேயின் முன்னணி அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே வழக்கமான கலந்தாய்வு கூட்டம் இன்று(16ம் தேதி) திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று  இரண்டு தொகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் வலியுறுத்திருக்கிறோம். குறிப்பாக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நீண்ட காலமாக மக்கள் முன்வைத்து வரக்கூடிய கோரிக்கை ஜனசதாப்தி ரயிலும், மைசூர் விரைவு வண்டியும் மயிலாடுதுறை வரையில் வந்து போகிறது, அவை இரண்டையும் சிதம்பரம் வழியாக கடலூர் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொது மேலாளர் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

அவற்றை பரிசீலித்து  ரயிலுக்கான நேரம் தொடர்பான சிக்கல்களை எல்லாம் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொது மேலாளர் கருத்து தெரிவித்திருக்கிறார். மீண்டும் கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு சென்று, பொது மேலாளரை அங்கேயும் சந்தித்து இந்த கோரிக்கைகள் தொடர்பான பல்வேறு விளக்கங்களை முன் வைத்தோம். அவர் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார். அடுத்து மும்பையில் இருந்து திருநெல்வேலி வரையில் விழுப்புரம் மதுரை வழியாக ரயில் விட வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கையை தென்னக ரயில்வே பொது மேலாளரின் பார்வைக்கு கொண்டு சென்றோம். சென்னை வரையில் வரக்கூடிய விரைவு வண்டியை விழுப்புரம் மதுரை வழியாக திருநெல்வேலி வரையில் கொண்டு செல்ல வேண்டும் என்கிற கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறோம். அதனை செய்வதற்கு என்ன சாத்திய கூறுகள் இருக்கும் என்பதை கண்டறிந்து அதன் அடிப்படையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் விடுதலை சிறுத்தைகளையும் இணைத்துக் கொண்டோம். அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவை தாக்கல் செய்திருந்தோம். பல கட்சிகள் வழக்கு தொடுத்திருந்த நிலையில் விடுதலை சிறுத்தைகளும் அதே வேண்டுகோளை முன்வைத்து வழக்கு தொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அரசியல் கட்சிகள் பெரு நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதியை பெறக்கூடிய தேர்தல் பத்திரம் செல்லாது, நடைமுறையில் இருக்காது என தீர்ப்பு வந்திருக்கிறது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது. இதனால் அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

பா.ஜ.க. அளவுக்கு மற்ற கட்சிகள் பெரிய அளவுக்கு பெரிய நிறுவனங்களிடமிருந்து நிதிகள் பெறவில்லை. பா.ஜ.க. தேர்தல் பத்திரங்கள் மூலம் வசூலித்திருக்கிற தொகை 6,600 கோடி என்று தெரியவருகிறது. பெரிய நிதியை திரட்டி இருக்கிற ஒரே கட்சி பா.ஜ.க. இந்தத் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் நிதியை யார் திரட்டி இருந்தாலும் அது ஏற்புடையது அல்ல” என தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.