Skip to main content

''அடுத்தமுறை பாஜக வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது... தமிழகத்திற்கும் இது நல்லதல்ல!'' - திருமா பேச்சு!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

thirumavalavan speech

 

விசிக சார்பில் சென்னை வேப்பேரியில் விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு பெரியார் ஒளி விருதும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விருதுகளை வழங்கிவிட்டு வாழ்த்துரை ஆற்றினார். ''இந்த விருது பெறுவர்களில் முதல்வர் வரிசையில் 4வது நபராகப் பெறுகிறார் முதல்வர் ஸ்டாலின். திமுகவுடனான உறவு தேர்தல் சார்ந்த உறவு அல்ல, எங்கள் உறவு கொள்கை சார்ந்த உறவு. ஒருமுறை கலைஞர் அவர்கள் சொன்னார், ‘எங்களுக்கும் விசிகவிற்குமான உறவு கொள்கை ரீதியான உறவு’ என்றார். அந்தவகையில் நீடித்துவருகிறது. திமுகவுடன் நின்றால்தான் பிற்போக்கு சக்திகளை முறியடிக்க முடியும். நாங்கள் வேண்டுகோளை முன்வைக்கிறோம். அகில இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கக் கூடிய ஆற்றல் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் உள்ளது. ஆகையால் மற்ற மாநிலத்தவரை ஒருங்கிணைத்து பிஜேபிக்கு எதிரான தளத்தில் நிற்க வேண்டும். அடுத்தமுறை பாஜக வந்தால் நாட்டைக் காப்பாற்ற முடியாது. தமிழகத்திற்கும் இது நல்லதல்ல. நீங்கள் தமிழகத்தில் உள்ள அல்லு சில்லுகளைப் பற்றி கவலைகொள்ளாமல், அற்பர்களைப் பற்றி கவலைகொள்ளாமல் அகில இந்திய அளவில் நீங்கள் கவனம்கொள்ள வேண்டும்.

 

காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை நாம் கட்டினால் அது பாஜகவிற்கு சாதகமாக முடியும். உங்களைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்குப் பேரிடியாக தேர்தல் வெற்றி மூலம் பதில் அளித்த முதல்வர் நீங்கள். அந்த துணிச்சல்கள் எங்கிருந்து வந்தது என்றால், பெரியார் மடியில் விளையாட, அண்ணாவின் அரவணைப்பில் இருக்க வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததால்தான் இது முடிந்துள்ளது. அந்த வழிவந்த நீங்கள், வியூகம் அமைப்பதில் கலைஞரைப் போல் செயல்பட வேண்டும். திமுகவுடன் என்றும் நாங்கள் தோள்கொடுத்து நிற்போம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எந்த சந்தேகமும் வேண்டாம்; இங்கு தான் போட்டியிடுவேன்'- திருமா பேட்டி

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
 'Don't be in any doubt; I will compete only here' - Mrs. Interview

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் 'சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன்' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''அதிமுக இன்னும் கூட்டணியை உருவாக்கவில்லை. பாஜக கூட்டணிக்கு ஆட்கள் தேடிக் கொண்டிருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அல்லது எதிர்க்கட்சி கூட்டணி இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமை உள்ளது.

நாங்கள் கேட்டிருப்பது நான்கு தொகுதிகள். அந்த நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதி பொதுத்தொகுதி. மூன்று தொகுதி தனித் தொகுதி என்ற கோரிக்கையை நாங்கள் வைத்துள்ளோம். ஆனால் 8, 10 கூட்டணிக் கட்சிகள் உள்ள ஒரு கூட்டணியில் இவ்வளவு தொகுதிகளைப் பெற முடியாது என்பதையும் நாங்கள் அறிவோம். சூழலுக்கு ஏற்ப முடிவு  செய்வோம். சிதம்பரம் என்னுடைய சொந்த தொகுதி. எனவே எந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் இடம் இல்லை. இது என்னுடைய சொந்த தொகுதி. இதில் தான் நான் போட்டியிட முடியும்'' என்றார்.

Next Story

'மீண்டும் பாஜக வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சியே இருக்காது'-விசிக மாநாட்டில் முதல்வர் பேச்சு

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
 'If the BJP comes again, there will be no federation called India'- Chief Minister's speech at the Vishik Conference

விசிகவின் வெல்லும் சனநாயகம் மாநாடு திருச்சி சிறுகனூரில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், ''இப்படை தோற்கின் எப்படி வெல்லும் என்ற அளவில் திருமாவளவனின் தொண்டர் படை கூடியுள்ளது. பட்டியலின மக்களை பாதுகாக்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு. தமிழகத்திற்கு உரம் சேர்க்கும் வகையில் நாங்கள் கொள்கை உணர்வோடு இணைந்து நிற்கிறோம்.  33 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சபதம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி. எனக்கு தோளோடு தோளாக நிற்பவர் திருமாவளவன். வெல்லும் சனநாயகம் என்று சொன்னால் போதாது, நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். சர்வாதிகார பாஜக அரசு தூக்கி எறிவோம்.

சமூக நீதி, சமத்துவம் கொண்ட ஆட்சியை இந்தியா முழுவதும் அமைப்பதற்கான வெல்லும் சனநாயகம் மாநாட்டை திருமா நடத்தி வருகிறார். அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தோம். தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சி, பன்முகத்தன்மை ஆகியவற்றை காப்பாற்ற பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி இருக்காது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம், மாநிலங்கள் என்ற நிலையே இருக்காது'' என்றார்.