கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் தன்னை 2009 மற்றும் 2011லேயே திமுக கூட்டணியை விட்டு வெளியே வரும்படி பாமக நிறுவனர் ராமதாஸ் வற்புறுத்தினார் என கூறினார்,
அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது,
தைலபுரத்தில் தலைவாழை இலை போட்டு அவரே சாப்பாடு பரிமாறி முடித்தபின் எல்லாரையும் உக்காரவைக்கும் ரிசப்ஷனில் உட்காரவைத்தார். ராமதாஸ் எங்களுடன் பேசிய ஒரு மணிநேரமும் திமுகவை பற்றித்தான் பேசினார். இந்த நாடே கெட்டு குட்டிசுவராய் போயிருச்சு. கலைஞர்தான் கள்ளுக்கடையை திறந்து எல்லாரையும் குடிகாரனாக ஆக்கினார் இப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி சொன்னார். நீ ஒருவன்தான் கலைஞர் கலைஞர் என ஒட்டிக்கொண்டு இருக்கிறாய். நீ வெளியே வந்தால் எல்லாம் முடிந்தது என கூறினார்.
மேலும் 2009 ,2011 ஆம் ஆண்டே திமுக கூட்டணியிலிருந்து வெளியே வா இந்த தேர்தலில் திமுகவை ஒழிப்போம். அடுத்த தேர்தலில் அதிமுகவை ஒழிப்போம். கலைஞர் உனக்கு இரண்டு சீட் தரமாட்டார் நான் ஜெ.விடன் பேசி உனக்கு 2 சீட் வாங்கிக்கொடுக்கிறேன் என்றார்.
தான்கூறுவது எதுவும் பொய் அல்ல, வேண்டுமானால் ஒரே மேடையில் ராமதாஸை சந்திக்க தயார் எனவும் திருமாவளவன் கூறினார்.