thiru

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த வெள்ளம்புதூரில் கடந்த மாதம் 21ம் தேதி வீடு புகுந்து சிறுவனைக்கொலை செய்து, தாய் - மகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறி வந்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கைது செய்து விழுப்புரம் எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இக்குற்றவாளி கடலூர் மாவட்டம் புனவகிரியை சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது.