விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம் 18.11.2018 ஞாயிறு காலை கல்லூரி வளாகத்தில் மூத்த முன்னாள் மாணவரும், மூத்த வழக்கறிஞருமான பூமாலை குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் அமைப்பு தொடங்குவது, துறைவாரியான நிர்வாக குழு அமைத்தல், துறை வாரியாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடத்துவது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டன.
மேலும் திரு கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு எனும் பெயரில் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு தற்காலிகமாக கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறப்பு தலைவராக மூத்த முன்னாள் மாணவரும், வழக்கறிஞருமான பூமாலை குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல் கூட்டமைப்பின் தலைவராக எழுத்தாளர் சுந்தர பாண்டியன், துணைத்தலைவராக வழக்கறிஞர் புஷ்பதேவன், செயலாளராக வழக்கறிஞர் கரு.காசிவிசுவநாதன், இணைச் செயலாளராக வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ், துணை செயலாளர்களாக செல்வி, செல்வமணி, பொருளாளராக ஜாகிர்உசேன் ஆகியோரும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஜெமினி ரங்கப்பிள்ளை, ஆசிரியர் வேப்பூர் ரவி, வழக்கறிஞர்கள் கே.ஆர்.விஸ்வநாதன், வழக்கறிஞர்கள் அப்துல்லா, மாய.மணிகண்டன், குபேரமணி, குமரகுரு மற்றும் செல்லதுரை, சிம்லாசங்கர், மணிமாறன், கணேஷ்குமார் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அடுத்தடுத்த கூட்டங்களில் நிர்வாகக் குழுவில் கூடுதல் உறுப்பினர்களும், துறை வாரியாக தனித்தனி நிர்வாக அமைப்புகளும் தேர்வு செய்வது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.