
டெலிவரி செய்யும் இளைஞரின் பையை திருட்டு இளைஞர்கள் எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை முகலிவாக்கத்தில் உள்ள குருசாமி தெருவில் இளைஞர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்த வீட்டிற்கு வந்த கொரியரை மட்டும் எடுத்துக் கொண்டு, வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது, வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த மற்ற கொரியர் பைகளை, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து, கொரியர் டெலிவரி செய்யும் இளைஞர் மாங்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை எடுத்து ஆராய்ந்தனர். அப்போது, இளைஞர் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த கொரியர் பைகளை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.