Skip to main content

'வசந்த மாளிகை போல கொடுத்திருக்கிறார்கள்; சிறையில் விதி மீறல்' - ஜெயக்குமார்

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

'They have given it like a spring house; Violation in jail'-Jayakumar interview

 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனியார் மருத்துவமனையிலிருந்து நீதிமன்றக் காவலுக்காகப் புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சில சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவலில் இருக்கும் பொழுது பொதுவாகவே ஏ வகுப்பு நீதிமன்றம் கொடுத்துள்ளது. ஏ வகுப்பிற்குரிய அந்த சலுகைகள் தான் கொடுக்கப்படும். ஆனால் இன்று பத்திரிகைகளில் அவருக்கு டிஜிபி பார்த்து சல்யூட் அடிக்கிறார், ஜெயிலர் பார்த்து சல்யூட் அடிக்கிறார் எனத் தகவல் வருகிறது. எந்த அளவுக்கு சிறை விதிகள் மீறப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். இது மட்டுமல்ல உள்ளே யாரும் போக முடியாது என்ற காரணத்தினால் உள்ளேயே ஒரு ஹாஸ்பிடல் இருக்கிறது. பெரிய அளவிற்கு ஒரு வசந்த மாளிகை போல செந்தில் பாலாஜிக்கு கொடுத்திருக்கிறார்கள்.

 

சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு சிறை விதிகளை மீறி இன்றைக்கு அவருக்கு இந்த வசதி செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னால் இது குறித்து அமலாக்கத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவரைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன? சிறை கைதி எண் கொடுக்கப்பட்டு சிறைக்குப் போய்விட்டார். ஆனாலும் கூட அவர் இன்னும் அமைச்சராக இருக்கிறார். இது தொடர்பாக ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காயத்ரி ரகுராமுக்கு அ.தி.மு.கவில் புதிய பொறுப்பு!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Gayatri Raghuram new responsibility in ADMK

நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.கவில் வெளிநாடு மற்றும் பிற மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக பா.ஜ.க மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.கவை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தார். அதனையடுத்து, அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசியபோது, அவர் அக்கட்சியில் இணைவார் எனத் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 

இந்த நிலையில், காயத்ரி ரகுராமுக்கு அ.தி.மு.க.வில் தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அ.தி.மு.கவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்ரி ரகுராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அ.தி.மு.க.வினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தொடரும் பேச்சுவார்த்தை - கூட்டணி நிலவர அப்டேட்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024

 

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணி நீடிப்பதால் திமுக தொகுதிப் பங்கீடு வரை சென்றுள்ளது. ஆனால், அதிமுகவால் தற்போது வரை கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் பேச்சுவார்த்தையை நீட்டித்து வருகிறது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை இன்று திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரண்டு கட்சிகளும் தலா ஒரு இடத்தை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மக்கள் நீதி மய்யம் விரைவில் திமுகவிடம் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் அதிமுக, பாமக மற்றும் தேமுதிகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்திருந்த நிலையில் தேமுதிக 7 தொகுதிகளை கேட்பதாகவும், ஆனால் அதிமுக 4 நான்கு இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் அதிமுகவிடம் பாமக 10 தொகுதிகளை கேட்பதாகவும் அதிமுக 7 தொகுதிகளை கொடுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேமுதிக, பாமக ஆகிய இரண்டும் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் பதவியைக் கேட்பதாகவும், அதற்கு அதிமுக தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையிலான குழு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஈரோடு அல்லது திருப்பூர், நாமக்கல், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய நான்கு தொகுதிகளை தமாகா கேட்டுள்ளது. மூன்று தொகுதிகளை  கொடுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கூட்டணியில் உள்ள தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு இடத்தை பாஜக ஒதுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்து முதல்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தயாராகி வருகிறது.