Skip to main content

செத்தாலும் நிம்மதி இல்லையா? ; இறந்தவரின் உடலை வைத்து பேரம் பேசிய அதிகாரிகள்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

Is there no peace in tragedy?; The officials negotiated with the body of the deceased
வெள்ளைச் சட்டையில் இருப்பவர் மனோகரன்

 

இறந்தவரின் உடலை பிணவறையில் வைப்பதற்கு ரூ.1000 லஞ்சம் வாங்கியதாக நள்ளிரவில் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

 

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலைப் பிணவறையில் வைக்க ரூ.1000 லஞ்சம் வாங்கியதாக இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். நுரையீரல் பிரச்சனை காரணமாக மனோகரன் என்பவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று உயிரிழந்தார். 

 

உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உறவினர்கள் ஆயத்தமானபோது பிரேதப் பரிசோதனை செய்த பின்புதான் உடலைக் கொடுப்போம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடலைப் பிணவறையில் வைக்க இளையராஜா என்பவர் 1000 ரூபாய் லஞ்சமாக வாங்கியுள்ளார். இளையராஜா அதே மருத்துவமனையில் மருத்துவ உதவிப் பணியாளராக பணிபுரிகிறார். 

 

1000 ரூபாய் கொடுத்ததற்கான ரசீதை உறவினர்கள் கேட்டுள்ளனர். அதற்கு இளையராஜா ரசீதை கொடுக்காததால் லஞ்சம் பெற்ற இளையராஜாவை கைது செய்யக்கோரி இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின் காலையில் நடந்த உடற்கூராய்விற்குப் பின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். 

 

இது குறித்து உறவினர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கையில், “டாக்டரிடம் கேட்டால் அரசிடம் சென்று கேளுங்கள் என்று கூறுகிறார். பிணவறையில் உடலை வைக்க வேண்டுமானால் 1000. எதுவும் செய்யாமல் உடலைக் கொடுத்தனுப்பினால் 2000 ரூபாயும் கேட்கின்றனர். பணியிலிருந்த பணியாளர் மீதும் மருத்துவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மற்றொருவர், “மதியம் 2 மணிக்கு வந்தோம். இப்போ மணி 7. இன்னும் பாடிய தரவில்லை” என்கிறார் கோபத்துடன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதீத வேகம்; மிதமிஞ்சிய போதை; கால்வாயில் பல்டி அடித்த கார்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

extreme speed; Excessive intoxication; The car crashed into the canal

 

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மது போதையில் காரை இயக்கிய நிலையில் சாலையோர கால்வாய்க்குள் கார் விழுந்து மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கால்வாய் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆவடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் காஞ்சிபுரத்தில் இருந்து கார் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தார். கார் ஓட்டிய அந்த இளைஞர் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த கால்வாய்க்குள் விழுந்தது. கார் காட்டுப்பாட்டை இழந்த உடனே காரில் இருந்த அனைவரும் கீழே குதித்து விட்டனர். கார் மட்டும் கால்வாய்க்குள் விழுந்து மூழ்கியது. உடனடியாக அங்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் ஜேசிபியை வைத்து காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணிநேர போராட்டத்திற்கு பின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளே கிடந்த கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டிய அர்ஜுன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

 

Next Story

செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஐடி ரெய்டு

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

 IT Raid on Cell Phone Spare Parts Manufacturing Company

 

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு மென்பொருள் நிறுவனங்களில் நேற்று சோதனையானது தொடங்கிய நிலையில் இரண்டாம் நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது.

 

சமீபகாலமாக வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் ஒவ்வொரு துறையாக கையில் எடுத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் புதுக்கோட்டையில் மணல் குவாரிகளை நடத்தி வரும் அதிபர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதேபோல் மின்வாரியத்திற்கு உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிலும் வருமானவரித்துறை சோதனை செய்திருந்தது. இந்நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு ஐடி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. சென்னை பெருங்குடி, கந்தன் சாவடி ஆகிய பகுதிகளில் உள்ள மென்பொருள் நிறுவனங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடந்தது.

 

இரண்டாம் நாளாக இன்றும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஃபிளக்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய சென்னை, ஸ்ரீபெரும்புதூர் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.